Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரொம்ப அட்வான்சா இருக்காங்களே...2023 பொங்கல் ரேசில் இடம்பிடித்த படங்கள் இதோ
சென்னை : 2023 ம் ஆண்டில் பொங்கல் ரிலீசை இப்போதே பல பெரிய படங்கள் கன்ஃபார்ம் செய்து விட்டன. அப்படி எந்த நடிகரின், எந்த படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு வர உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்.
பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே, பண்டிகைக்கு ரிலீஸ் செய்வது வழக்கமாகி விட்டது. காரணம், சாதாரண நாட்களை விட பண்டிகை அல்லது விடுமுறையை ஒட்டி ரிலீஸ் செய்தால் வழக்கமாக கிடைப்பதை விட கூடுதல் வசூலை பெறும் என்பதாலும், பிளாக்பஸ்டர் படங்களின் பட்டியலில் சீக்கிரம் இணைந்து விடலாம் என்பதாலும் தான்.

4 படம் கன்ஃபார்ம்
அப்படி 2022 ம் ஆண்டே ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட சில பெரிய நடிகர்களின் படங்கள், 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளன. இதுவரை வெளியான தகவலின்படி பிரபாசின் ஆதிபுருஷ், ஹரிஹர வீர மல்லு, விஜய் தேவரகொண்டா 11, விஜய் 66 ஆகிய நான்கு படங்கள் 2023 பொங்கலுக்கு ரிலீசாவது உறுதியாகி உள்ளன. இந்த பட்டியலில் விரைவில் மேலும் பல படங்கள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிபுருஷ்
இந்தியாவிலேயே மிக அதிகமாக 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை பாலிவுட் டைரக்டர் ஓம் ராவத் இயக்கி வருகிறார். இந்தி, தெலுங்கு என ஒரே சமயத்தில் இரு மொழிகளில் படமாக்கப்பட்டு வரும் இந்த படம் பான் இந்தியன் படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பிரபாஸ், சைஃப் அலிகான், கிருத்தி சனோன் நடித்துள்ள இந்த படம் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட உள்ளது. 2023 ம் ஆண்டு ஜனவரி 12 ம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஹரி ஹர வீர மல்லு
டைரக்டர் கிருஷ் ஜகர்லமுன்டி எழுதி, இயக்கி உள்ள ஹரி ஹர வீர மல்லு படம் தெலுங்கில் மற்றொரு பீரியாடிக் ஆக்ஷன் சாகச படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் டைட்டில் ரோலான வீர மல்லு ரோலில் பவன் கல்யாண் நடிக்கிறார். நிதி அகர்வால், அர்ஜுன் ராம்பால், ந்ரகீஸ் ஃபக்ரி நடிக்கும் இந்த படம் 17 ம் நூற்றாண்டில், முகலாய பேரரசின் போது நடப்பதாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 2022 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட இந்த படம் பல காரணங்களால் தள்ளி போடப்பட்டு, தற்போது 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விடி 11
விஜய் தேவரகொண்டாவின் 11வது படத்திற்கு விடி 11 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் ஷுட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் 16 நாள் ஷுட்டிங் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மே 16 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஷிவா நிர்வானா இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். காஷ்மீர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் இடத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

விஜய் 66
விஜய்யின் 66 வது படமாக உருவாகி வரும் தளபதி 66 படத்தை வம்சி பைடபள்ளி இயக்கி வருகிறார். ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், தற்போது 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படங்கள் வருமா
இந்த நான்கு படங்கள் தவிர ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் இயக்கும் ஆர்சி 15 படமும் பொங்கல் ரேசில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தையும் தில் ராஜு தான் தயாரிக்கிறார். அதே சமயம், ஆர்சி 15 பொங்கலுக்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வரவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2023 பொங்கல் ரேசில் ரஜினியின் தலைவர் 169 படமும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.