»   »  இனி 2 டிராக் தான்.. ஹீரோவாவும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன்.. வடிவேலு

இனி 2 டிராக் தான்.. ஹீரோவாவும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன்.. வடிவேலு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹீரோ, காமெடியன் என 2 பாதையிலும் பயணிக்கப் போவதாக நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார்.

விஷால், தமன்னா நடிக்கும் 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் விஷால், வடிவேலு, சூரி, பாண்டிராஜ், சுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே விஷால்- வடிவேலு கூட்டணியில் வெளியான 'திமிரு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் மூலம் தன்னுடைய காமெடிப் பயணத்தை வடிவேலு மீண்டும் தொடங்குகிறார்.

தெனாலிராமன்

தெனாலிராமன்

வடிவேலு ஹீரோவாக நடித்த 'தெனாலிராமன்', 'எலி' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. இருந்தாலும் தன்னுடைய ஹீரோ ஆசையை கைவிட முடியாமல் வடிவேலு தவித்து வந்தார். 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமல்லவா' தமிழ் சினிமாவில் உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூற, மீண்டும் காமெடியனாக இறங்குவது என்று வடிவேலு முடிவெடுத்திருக்கிறார்.

கத்திச்சண்டை

கத்திச்சண்டை

சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'கத்திச்சண்டை' படம் வடிவேலுவின் 2 வது காமெடி இன்னிங்க்ஸை ஆரம்பித்து வைத்துள்ளது.இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்.

காமெடியன்-ஹீரோ

காமெடியன்-ஹீரோ

இதுகுறித்து வடிவேலு "இனி ரெண்டு டிராக் தான். ஹீரோவா வந்தாலும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன். இனி நிறைய படங்களில் காமெடி வேடம் படம் முழுக்க வருவது மாதிரி இறங்க உள்ளேன். இயக்குநர் சுராஜ் நம்மளுக்கு ஏத்தா மாதிரி தீனி போடுவார். அதனால் நம்பிக்கையோடு நடிக்கிறேன். கண்டிப்பாக வெற்றி பெரும்" என்று தெரிவித்திருக்கிறார்.

இம்சை அரசன்

இம்சை அரசன்

ஷங்கர்-லைக்கா கூட்டணியில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'யின் 2 வது பாகத்தில் ஹீரோவாக நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனை மனதில் வைத்துத்தான் ஹீரோ, காமெடியன் என இரண்டு பாதையிலும் பயணிப்பேன் என வடிவேலு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
'Hero,Comedian can Travel 2 path' Vadivelu says Kaththi Sandai Pooja Event.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil