»   »  முத்தக் காட்சியா, நான் மாட்டேன்: தேம்பித் தேம்பி அழுத ஹீரோயின்

முத்தக் காட்சியா, நான் மாட்டேன்: தேம்பித் தேம்பி அழுத ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோகனா படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க மறுத்து ஹீரோயின் கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது.

பவர் ஸ்டார் சீனிவாசன் ஹீரோவாக நடித்துள்ள படம் மோகனா. காமெடி படமான இதில் வித்தியாசமான வில்லனாக வருகிறார் மொட்டை ராஜேந்திரன்.

பவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த கல்யாணி நாயர் நடித்துள்ளார்.

காதல்

காதல்

கதைப்படி கல்யாணி நாயரின் பெயர் தான் மோகனா. படத்தில் அவர் நாடக நடிகை. அவர் மீது பவர் ஸ்டாருக்கும், ஊர் பண்ணையாரான மொட்டை ராஜேந்திரனுக்கும் காதல் வருகிறது.

மோகனா

மோகனா

செவிலி படத்தை இயக்கிய ஆர்.ஏ. ஆனந்த் தான் மோகனா படத்தின் இயக்குனர். பவர் ஸ்டார் மற்றும் மொட்டை ராஜேந்திரன் இடையே சிக்கி மோகனா என்ன ஆகிறார் என்பது தான் கதை.

முத்தம்

முத்தம்

மொட்டை ராஜேந்திரனின் கனவில் ஹீரோயின் வந்து முத்தம் கொடுக்கும்படி காட்சியை படமாக்க திட்டமிட்டார் இயக்குனர். இதற்கிடையே தனக்கு முத்தக் காட்சி வேண்டும் என்று பவர் அடம்பிடித்துள்ளார்.

அழுகை

அழுகை

முத்தக் காட்சியில் நடிக்க மறுத்துள்ளார் கல்யாணி. அதன் பிறகு அவரை படப்பிடிப்பு தளத்தில் காணாமல் அனைவரும் தேடியுள்ளனர். அவரோ ஒரு அறையை பூட்டிக் கொண்டு கதறி அழுதுள்ளார். இதை பார்த்த இயக்குனர் முத்தக் காட்சியே இல்லம்மா என்று கூறிய பிறகே மீண்டும் நடிக்க வந்துள்ளார் கல்யாணி.

English summary
A young actress named Kalyani Nair cried after she was asked to act in a kissing scene in Powerstar Srinivasan's Mohana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil