»   »  சொல்லாமல் கொள்ளாமல் கம்பி நீட்டிய ஹீரோயின்... பர்த்டே கேக்குடன் காத்திருந்த தயாரிப்பாளர்!

சொல்லாமல் கொள்ளாமல் கம்பி நீட்டிய ஹீரோயின்... பர்த்டே கேக்குடன் காத்திருந்த தயாரிப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெளியிலிருந்து பார்க்க, சினிமா உலகம் கவர்ச்சியும் சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருந்தாலும், ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் தயாரிப்பாளர்கள் முழி பிதுங்கி மூலையில் நிற்க வேண்டியதாகிவிடுகிறது.

இன்று நடந்திருக்க வேண்டிய ஒரு ஷூட்டிங், வளர்ந்து வரும் நடிகை ஒருவரின் அலட்சியத்தால் ரத்தாகி, அதன் தயாரிப்பாளருக்கு அநியாயத்துக்கு இரண்டு மூன்று லட்சங்கள் இழப்பைத் தந்திருக்கிறது.

Heroine's absence costs Rs 3 lakh loss to producer

நடிகை பெயர் ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் படங்களின் நாயகி. இப்போது மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இறுதி நாள் ஷூட்டிங் இன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் நடக்கவிருந்தது. இன்றைய ஷூட்டிங் நடந்திருந்தால், மாலையில் பூசணிக்காய் உடைத்திருப்பார்கள். இத்தனைக்கும் பங்கேற்கும் அத்தனை பேரும் டாப் டெக்னீஷியன்கள். தயாரிப்பாளரும் லேசுப்பட்டவர் அல்ல.

காலையிலேயே தயாரிப்பாளர், டெக்னீஷியன்கள், ஹீரோ உள்ளிட்ட துணை நடிகர்கள் என சகலரும் ஆஜர். ஹீரோயினுக்கு மும்பையிலிருந்து டிக்கெட் போட்டும் கொடுத்திருந்தார்கள். அவரது டேமேஜர்.. ஸாரி மேனேஜர் ஷான் என்பவரும் ஹீரோயின் வந்துவிடுவார் என்றுதான் கூறி வந்தார். கடைசி நாள் ஷூட் என்பதால் முன்கூட்டியே மீதி சம்பளம் மொத்தத்தையும் செட்டில் பண்ணியிருந்தார் தயாரிப்பாளர்.

ஆனால் ஐஸ்வர்யா தத்தா சொன்னபடி வரவே இல்லை. அவருக்குப் போன் அடித்தால் ஸ்விட்ச் ஆஃப். டேமேஜருக்குப் போன் பண்ணால் இதோ அதோ என்று டபாய்த்துக் கொண்டே இருந்தார். ஐஸ்வர்யாவின் பாய் ப்ரண்ட் ஒருவர் மும்பையில் இருக்கிறார். அந்தப் பார்ட்டியைத் தொடர்பு கொண்டபோதுதான், ஐஸ்வர்யா சென்னையிலேயே இல்லை, எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் புதுப் படத்தில் நடிக்க பொள்ளாச்சிக்குப் போய்விட்டார் என்ற உண்மை தெரிந்தது.

Heroine's absence costs Rs 3 lakh loss to producer

இதை கடைசி வரை தயாரிப்பாளரிடம் சொல்லவே இல்லை டேமேஜர் ஷான். ஆனால் இரண்டு தயாரிப்பாளர்களிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு, ஒரு ஷூட்டிங்குக்கு மட்டும் ஹீரோயினை அனுப்பி வைத்திருக்கிறார் அவர்.

இன்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தின் தயாரிப்பாளருக்கு பிறந்த நாள் வேறு. அதற்காக கேக் வாங்கி வைத்துக் கொண்டு, 'ஹீரோயின் வந்ததும் கேக் வெட்டலாம்' என்று காத்திருந்தாராம். ஷூட்டிங் ஏற்பாட்டுக்காக செய்யப்பட்ட மூன்று லட்ச ரூபாய் எள்ளானதுதான் மிச்சம்!

English summary
Upcoming actress Aishwarya Dutta has failed to attend Maraithirunthu Paarkum Marmam Enna and due to this the producer lost Rs 3 lakhs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil