twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்.. என்ன பண்ணாரு தெரியுமா?

    |

    சென்னை: நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியதாக பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சமீப காலமாக ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.

    கடன், வட்டி, மோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்களில் அவர்கள் சிக்கி வருகின்றனர். ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்ன பிரச்சனையில் சிக்கி உள்ளார் என்பதை இங்கே பார்ப்போம்..

    ஆஸ்கர் ரவிச்சந்திரன்

    ஆஸ்கர் ரவிச்சந்திரன்

    பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இவர், 2 படங்களை தயாரிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 97 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த சினிமா படங்களை வங்கிக்கு தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்ததாகவும், இந்த 2 படங்களும் சரியாக ஓடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும்
    திரைப்படத்தை130 கோடிக்கு விற்ற அவர், வங்கிக் கடனை செலுத்தாமல் மற்ற கடன்களை செலுத்தியிருக்கிறார்.

    வங்கி கடன்

    வங்கி கடன்

    இதையடுத்து, வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. கடனுக்காக அடமானம் வைத்த அவரது சொத்தை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்தது. இதை எதிர்த்து கடன் வசூலிப்பு தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் ரவிசந்திரன் வழக்கு தொடர்ந்து இடைக்கால நிவாரணம் பெற்றார்.

    37 கோடி ரூபாய்

    37 கோடி ரூபாய்

    இறுதியாக கடந்த ஜூன் 24ம் தேதி ஏலம் குறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தெடர்ந்தார். அதில், கடன் பாக்கித் தொகை .37.90 கோடி ரூபாயை ஒரே தவணையில் செலுத்துவதாக கூறியிருந்தார்.

    சொன்னதை செய்யல

    சொன்னதை செய்யல

    இந்த வழக்கு உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆர்.மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். மனுதாரருக்கு பல முறை வாய்ப்பு கொடுத்தும் அவர் கடன் தொகையை திருப்பி செலுத்த வில்லை. மேலும் உயர்நீதிமன்றத்தை தவறான பயன்படுத்துகிறார் என்று வாதிட்டார்.

    ஒரு லட்சம் அபராதம்

    ஒரு லட்சம் அபராதம்

    இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஏலம் தேதி ஏற்கனவே முடிந்து விட்டதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் ஆஸ்கார் சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரவிச்சந்திரன், உயர்நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தி வந்துள்ளார். எனவே, அவருக்கு .1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம் என உத்தரவிட்டு அவர் தொடுத்த வழக்கையும் தள்ளுபடி செய்தனர்.

    English summary
    High Court fined Oscar Ravichandran for wasting court time in Bank debt case. High Court orders him to pay 1 lakh rupees soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X