For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கே,ஜி.எஃப்2 படப்பிடிப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பு - கோர்ட் தடை

|
National award winner | stunt choreographer Anbariv | Kannada film KGF

பெங்களூரு: படப்பிடிப்பு நடைபெறுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சொல்லி கோலார் தங்க வயல் பகுதியைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நான் ஒருத்தன அடிச்ச டான் ஆகலடா... நான் அடிச்ச பத்து பேருமே டான் தான்டா. இந்த டயலாக்கே கே.ஜி.எஃப் படத்தின் ஹிட்டடித்த வசனம். கடந்த 2018ஆம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் சண்டைக் காட்சி அமைப்பு என இரு பிரிவுகளில் இந்தப் படத்திற்கு தேசிய விருதை தட்டி தூக்கி வந்த படம்.

High Court ordered an interim ban for KGF 2 shooting

இந்தப் படத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணமாக கருதப்படுவது, இப்படத்தில் ஹீரோவாக நடித்த கன்னட சினிமாவின் முன்னணி நாயகனான யாஷ்ஸின் ஜைஜாண்டிக்கான (Gigantic) ஆறு அடிக்கு மேல் உள்ள கம்பீரமான தோற்றமும் காரணமாகும். படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளுக்கு ஏற்ற உடல் வாகும் இருந்ததால் தான் சண்டைக் காட்சிகளும் தெறிக்க விட்டன.

இதனால் தான் இந்தப் படத்திற்கு சண்டைக்காட்சி அமைப்புக்கும் தேசிய விருது கிடைத்தது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே 200 கோடி ரூபாய் வசூலாக சாதனை படைத்தது.

சீட்டு மோசடியில் அம்மா கைது.. சோகத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கவின் ?

இதில் ஆச்சரியப்படத்தக்க விசயம் என்னவென்றால், பொதுவாக கன்னடப் படம் என்றாலே, ஒரு குறுகிய வட்டத்தில் அடங்கி விடும். போட்ட தொகைக்கு கொஞ்சம் அதிகமாக வசூலானாலே தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியடைந்தது போல் சந்தோசப்படுவார்கள். இந்த நிலையில் கே.ஜி.எஃப் திரைப்படம் வெளியாக நான்கு நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் என்பது கின்னஸ் சாதனை செய்தது போல் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தனர்.

இதனால், கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெகு விரைவில் எடுக்கப்படும் என்று கன்னட ரசிகர்கள் முதல அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கேற்றார் போல், இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

கடந்த மே மாதம் இதற்கன ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இதனை உறுதி செய்வதுபோல், இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், படப்பிடிப்பை பார்வையிடுவது போல் ஃபோட்டோ வெளியானது. இரண்டாம் பாகத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிக்கப்போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது.

இந்நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆதிரா என்ற முக்கிய வில்லன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்கப்போவதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகி வருகிறது. இதற்காக கோலார் தங்கவயல் பகுதியில் இப்படத்திற்காக பிரமாண்டமாக செட் அமைக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுவரும் சூழலில், படப்பிடிப்பு நடைபெறுவதால் அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதனையடுத்து, கே.ஜி.எஃப் 2 படப்பிடிப்பு நடத்த தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படுவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவையடுத்து, கே.ஜி.எஃபி 2 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப் 2 படத்தின் படப்பிடிப்புக்கு தடைவிதித்துள்ளதால், இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

English summary
The court has banned the taking of the second part of the KGF film after people in Kolar Gold Field filed a lawsuit claiming that the shooting was an environmental hazard.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more