twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போலீஸ் திரைக்கதைகளில் கலக்கிய இயக்குநர்....கவுதம் வாசுதேவ மேனன் பிறந்தநாள்

    |

    தமிழ்படங்களில் வித்தியாசத்தைக் கொடுத்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். சூர்யாவை வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக காட்டியவர் அதன் பின்னர் சூர்யா சிங்கம் 3 பார்ட் நடிக்க தூண்டுதலாக இருந்தது. இதேபோல் கமலை வைத்து வித்தியாசமாக படம் கொடுத்துள்ளார். அவரது பிறந்த நாள் இன்று.

    கௌதம் மேனன் வில்லனாக மிரட்டும் “மைக்கேல்“… போஸ்டரே தாறுமாறா இருக்கே !கௌதம் மேனன் வில்லனாக மிரட்டும் “மைக்கேல்“… போஸ்டரே தாறுமாறா இருக்கே !

    திரைக்கதையில் சமரசம் இல்லா கௌதம் வாசுதேவ மேனன்

    திரைக்கதையில் சமரசம் இல்லா கௌதம் வாசுதேவ மேனன்

    தமிழ் திரையுலகில் கௌதம் வாசுதேவ் மேனன் வித்தியாசமான இயக்குநர் எனப்பெயர் எடுத்தவர். அவரது பல திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு ரசிகர்களைத்தாண்டி பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்தது எனலாம். தனது திரைக்கதை, படத்துக்காக எவ்வித சமரசமும் செய்துக்கொள்ளாதவர் கவுதம் வாசுதேவ்.

    பொறியியல் பட்டதாரி, தமிழ்-மலையாளம் சங்கமம் கௌதம் வாசுதேவ மேனன்

    பொறியியல் பட்டதாரி, தமிழ்-மலையாளம் சங்கமம் கௌதம் வாசுதேவ மேனன்

    1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி கௌதம் மேனன் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தில் பிறந்தார். தந்தை ஒரு மலையாளி தாயார் தமிழர். கேரளாவில் பிறந்தாலும் இவர் வளர்ந்தது எல்லாம் சென்னை அண்ணா நகரில் தான். இவர் படித்தது வளர்ந்தது சென்னையில், இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரி காலத்தில் திரைப்படங்கள், நாவல்களால் ஈர்க்கப்பட்டார். பின்னர் சினிமா ஆசையில் பிரபல இயக்குநர், கேமரா மேன் ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து மின்சாரக்கனவு படத்தில் பணியாற்றினார்.

    இளம் ரசிகர்களை கவர்ந்த 'மின்னலே'

    இளம் ரசிகர்களை கவர்ந்த 'மின்னலே'

    2001 ஆம் ஆண்டு மின்னலே படம் இவரது முதல் இயக்கத்தில் வெளியானது, இது பரபரப்பாக பேசப்பட்டது. இளம்பருவத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றது. கல்லூரி காலத்தில் அவர் சந்தித்த சம்பவங்களை வைத்து அவர் பல திரைக்கதைகளை எழுதி வைத்திருந்தார். அதில் அவர் சந்தித்த ஒரு காதல் கதையைத்தான் விண்ணைத்தாண்டி வருவாயா என சிம்புவை வைத்து படமாக்கினார்.

    'காக்க காக்க' காக்க வைத்தாலும் வெற்றிபடமானது

    'காக்க காக்க' காக்க வைத்தாலும் வெற்றிபடமானது

    போலீஸ் பாத்திரங்களை வித்தியாசமாக படமாக்கிய இயக்குநர்களில் கௌதம் வாசுதேவ் மேனன் தனித்துவமிக்கவர். அவர் முதன்முதலில் கமல்ஹாசனுக்காக ஒரு போலீஸ் கதையை எழுதி அதை அவரிடம் நடிக்க கேட்க அவர் அப்போது தசாவதாரம் படவேலையில் மும்மூரமாக இருந்ததால் அவர் மறுக்க பின்னர் மாதவன், அஜித்குமார் உள்ளிட்டோரிடம் பேசியும் அவர்கள் ஒத்துவராத நிலையில் விக்ரமை அணுக அவரும் மறுக்க பின்னர் சூர்யாவை ஒப்பந்தம் செய்தார். அந்தப்படம் தான் 'காக்க காக்க' காவல் அதிகாரி பற்றி வித்தியாசமாக கூறிய படம். இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் சூர்யா புது அவதாரம் எடுத்தார் என்று கூறலாம்.

    சூர்யாவை போலீஸாக மாற்றியவர், கமலுக்கு பெருமைச் சேர்த்த வேட்டையாடு விளையாடு

    சூர்யாவை போலீஸாக மாற்றியவர், கமலுக்கு பெருமைச் சேர்த்த வேட்டையாடு விளையாடு

    அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தை இயக்கினார். சூர்யாவை வைத்து வாரணம் ஆயிரம் படத்தை இயக்கினார், பின்னர் 2015 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கினார். மூன்றும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி சாயல் கொண்ட கதைக்களம் தான் என்றாலும் ரசிகர்கள் மூன்றுப்படத்தையும் வெற்றிப்படமாக்கினர். வித்தியாசமான கதை அமைப்பால் பாலிவுட், டோலிவுட்டிலும் கௌதம் வாசுதேவ மேனனுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

    தேசிய விருதுப்பெற்ற படத்தை தயாரித்தவர்

    தேசிய விருதுப்பெற்ற படத்தை தயாரித்தவர்

    அவ்வப்போது படங்களையும் தயாரித்து வந்தார். இவர் தயாரிப்பில் வெளியான ராம்குமார் இயக்கிய தங்கமீன்கள் தேசிய விருதைப்பெற்றது. இவரது தோரணை, வித்தியாசமான பேச்சு, நடிப்பு தமிழ் திரையுலகில் வில்லனாக நடிக்கத்தொடங்கி வரவேற்பை பெற்றுள்ளார். மலையாளப்படங்களிலும் இவருக்கு வரவேற்பு உள்ளது. 2018 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வந்த அச்சம் என்பது மடமையடா சிம்பு நடிப்பில் வெளிவந்தது. தற்போது மைக்கேல் படத்தில் கௌதம் வாசுதேவ மேனன் நடிக்கிறார்.

    போலீஸுக்காக வித்தியாசமான படம்

    போலீஸுக்காக வித்தியாசமான படம்

    தமிழ் திரையுலகில் பல இயக்குநர்கள் கதாசிரியர்கள் போலீஸ் கதாநாயகர்கள் கதையை எடுத்தாலும், அதில் ஹோம் வர்க் செய்து வேறுகோணத்தில் படத்தை எடுத்து போலீஸ் கதாநாயகர்களை சிறப்பித்த இயக்குநர்களில் கௌதம் வாசுதேவ மேனன் நிச்சயம் பேசப்படுவார். கௌதம் வாசுதேவ மேனன் ஹாரிஸ் ஜெயராஜ் ஜோடி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளது. சமீபத்தில் இந்த ஜோடி பிரிந்தது.

    English summary
    He is a different kind of Tamil film director and has made a difference in police stories Today is Gautam Vasudeva Menon's birthday., தமிழ்ப்பட இயக்குநர்களில் இவர் வித்தியாசமானவர், போலீஸைக்கூட வித்யாசமாக காட்டியவர், தற்போது வில்லனாக பல படங்களில் நடித்து வருகிறார். கௌதம் வாசுதேவ மேனன் பிறந்த நாள் இன்று.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X