»   »  பிரமாண்ட இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ.10,000 பரிசு: பாஜக தலைவர்

பிரமாண்ட இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ.10,000 பரிசு: பாஜக தலைவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

போபால்: பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை செருப்பால் அடிப்பவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என பாஜக தலைவர் அகிலேஷ் கந்தெல்வால் அறிவித்துள்ளார்.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோரை வைத்து வரலாற்று படமான பத்மாவதியை இயக்கி வருகிறார்.

ராணி பத்மாவதியை மையமாக வைத்து கதை நகர்கிறது.

தாக்குதல்

தாக்குதல்

படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்தபோது ராணி பத்மாவதி பற்றிய வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி கர்னி சேனா அமைப்பினர் படப்பிடிப்பு தளத்தை சேதப்படுத்தினர்.மேலும் பன்சாலியையும் தாக்கினர்.

பாலிவுட்

பாலிவுட்

பன்சாலி படப்பிடிப்பு தளத்தில் தாக்கப்பட்டது குறித்து அறிந்து பாலிவுட்காரர்கள் கொந்தளித்துள்ளனர். நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது, வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று பாலிவுட் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

பரிசு

பரிசு

சஞ்சய் லீலா பன்சாலியை செருப்பால் அடிப்பவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் அகிலேஷ் கந்தெல்வால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பத்மாவதி

பத்மாவதி

பத்மாவதி இந்து ராணி என்பதால் அவரை பற்றிய வரலாற்று தகவல்களை பன்சாலி மாற்றிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தின் தலைப்பை மாற்றவும் பன்சாலியிடம் கர்னி சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

English summary
Madhya Pradesh BJP leader Akhilesh Khandelwal announced a prize money of Rs. 10,000 to those who hit Bollywood director Sanjay Leela Bhansali with a shoe.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil