»   »  தமிழ்ப் படங்களோடு மல்லுக்கட்டும் ஆங்கில டப்பிங் படங்கள்!

தமிழ்ப் படங்களோடு மல்லுக்கட்டும் ஆங்கில டப்பிங் படங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வழக்கம்போல இந்த வெள்ளிக்கிழமையும் ஐந்து தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவற்றுடன் மல்லுக்கட்ட வருகிறது ஹாலிவுட்டின் தி லெஜன்ட் ஆப் டார்ஸான்.

இந்த ஐந்து படங்களில் வில்லாதி வில்லன் வீரப்பன் மற்றும் ஒரு மெல்லிய கோடு பல மொழிப் படங்கள். வேறு மொழிகளில் முன்பே ரிலீசாகிவிட்டு இப்போதுதான் தமிழுக்கு வருகின்றன.

அப்பா

அப்பா

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக வருகிறது சமுத்திரக்கனியின் அப்பா. குழந்தைகள் வளர்ப்பு, குழந்தைகளுக்கான ஆரோக்கியமான கல்விதான் படத்தின் கரு. ஏற்கெனவே படம் பார்த்த அத்தனைப் பேரும் பாராட்டிவிட்டார்கள். சமுத்திரக்கனி முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துள்ளார்.

ஜாக்சன் துரை

ஜாக்சன் துரை

தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜாக்சன் துரை, மீண்டும் பேய் சீசனை கோலிவுட்டில் தொடங்கி வைக்க வந்துள்ளது. சத்யராஜ், சிபிராஜ் நடித்துள்ளனர்.

பைசா

பைசா

அப்துல் மஜீத் இயக்கியுள்ள பைசா படத்தில் பசங்க, கோலி சோடா படங்களில் நடித்த ஸ்ரீராம் நாயகனாக நடித்துள்ளார். ரங்கநாதன் ராஜு, கண்ணன் பாஸ்கர் தயாரித்துள்ளனர்.

ஒரு மெல்லிய கோடு

ஒரு மெல்லிய கோடு

ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகவிருந்து, பின்னர் நிறுத்தப்பட்ட படம். அர்ஜுன், ஷாம், மனிஷா கொய்ராலா நடித்துள்ளனர். இன்று ஓரளவு நல்ல அரங்குகளில் வெளியாகிறது.

வில்லாதி வில்லன் வீரப்பன்

வில்லாதி வில்லன் வீரப்பன்

நடந்தத உண்மைகளைத் திரித்து எடுப்பதில் அப்படி ஒரு பேரானந்தம் ராம் கோபால் வர்மாவுக்கு. வீரப்பன் கதையை அப்படியே உல்டாவாக எடுத்திருக்கிறார் வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரில். ஏற்கெனவே கன்னடம், இந்தியில் பெரும் தோல்வியைத் தழுவிய இந்தப் படம் இப்போது தமிழில்.

தி லெஜன்ட் ஆப் டார்ஸான்

தி லெஜன்ட் ஆப் டார்ஸான்

இந்த வெள்ளிக்கிழமை வெளியாகும் மற்ற நேரடி தமிழ்ப் படங்களை விட மிக நல்ல அரங்குகள், அதுவும் அதிக அரங்குகளில் வெளியாகிறது டார்ஸான் படம். இது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள படம். ஆனால் முன்பதிவில் இந்தப் படத்துக்கு அருகில் கூட வர முடியவில்லை மற்ற தமிழ்ப் படங்களால்.

English summary
Today there are 5 direct Tamil movies and Hollywood biggie Taarzaan released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil