»   »  பாக்ஸ் ஆபிஸைத் தெறிக்கவிட்ட ஹாலிவுட் விக்ரம் வேதா தமிழுக்கு வருது!

பாக்ஸ் ஆபிஸைத் தெறிக்கவிட்ட ஹாலிவுட் விக்ரம் வேதா தமிழுக்கு வருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன் : ஹாலிவுட் படமான 'தி ஹிட்மேன்ஸ் பாடிகார்ட்' படம் தற்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு 'மரண நிமிடம்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

ஹாலிவுட் நடிகர்கள் ரயன் ரெனால்ட்ஸ், சாமுவல் ஜாக்ஸன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'தி ஹிட்மேன்ஸ் பாடிகார்ட்'. 'தி டைரக்டர், 'தி லைட்டர்', 'ரெட் ஹில்', 'தி எக்ஸ்பாண்டபிள்' ஆகிய படங்களை இயக்கிய பேக்ரிக் ஹக்ஸ் இநதப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு அல்ட்டி ஓவர்சன் இசையமைத்துள்ளார்.

Hollywood vikram vedha will come in tamil dubbing.

இந்தப் படம் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'விக்ரம் வேதா' மாதிரியான அண்டர்கிரவுண்ட் தாதாக்களின் கதை. சர்வதேச போதை மருந்துக் கடத்தல் மன்னனின் பாடிகார்டாக இருக்கும் ஹீரோ, தாதாவை கொல்லத் துடிக்கும் போலீஸ் என இரு தரப்புக்கும் இடையிலான மோதல் கதைதான் 'தி ஹிட்மேன்ஸ் பாடிகார்ட்'.

Hollywood vikram vedha will come in tamil dubbing.

கடந்த 18-ம் தேதி அமெரிக்காவில் வெளியான இந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 30 மில்லியன் டாலரில் உருவான இந்தப் படம் அமெரிக்காவில் மட்டும் 62 மில்லியன் டாலர் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருக்கிறது. திகில் படமான 'அன்னபெல்' பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்தப் படம் இந்தியாவில் வருகிற செப்டம்பர் 1-ம் தேதி வெளிவருகிறது. தமிழில் டப் செய்யப்பட்டு 'மரண நிமிடம்' என்ற டைட்டிலுடன் வெளியிடப்படுகிறது.

English summary
Tamil dubbed version of the Hollywood movie The hitman's bodyguard is getting released in TN. Tamil dubbed version is titled 'Marana Nimidam'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil