பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி நிமிடங்கள்... மருத்துவமனை நிர்வாகம் சொன்ன தகவல்

மும்பை : பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92 வது வயதில் இன்று காலை உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 28 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் கடைசி நிமிடங்கள் பற்றி மருத்துவமனை நிர்வாகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

Recommended Video

பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் | Latha Mangeshkar Biography

கொரோனா மற்றும் நிமோனியா தொற்று காரணமாக மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஐசியு.,வில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. படிப்படியாக தேறி வந்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை, நேற்று மீண்டும் மோசமடைந்தது. இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கவலைக்கிடமான லதா மங்கேஷ்கர்

கவலைக்கிடமான லதா மங்கேஷ்கர்

உடல்நிலை தேறி வந்ததால் லதா மங்கேஷ்கருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிகள் நீக்கப்பட்டு, ஆக்சிஜன் மட்டும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திடீரென நேற்று மீண்டும் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் ஐசியு.,வில் வென்டிலேட்டர் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று டாக்டர்கள் கூறி இருந்தனர்.

28 நாட்கள் சிகிச்சை

28 நாட்கள் சிகிச்சை

Breach Candy மருத்துவமனையில் 28 நாட்களுக்கும் மேலாக லதா மங்கேஷ்கர் சிகிச்சை பெற்று வந்தார். ஜனவரி 8ம் தேதி நள்ளிரவில் லேசான கொரோனா அறிகுறிகளுடன் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் நுழையீரல் பகுதியில் லேசான வைரல் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக நிமோனியா மற்றும் கொரோனாவிற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை சொன்ன விளக்கம்

மருத்துவமனை சொன்ன விளக்கம்

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை பற்றி Breach Candy மருத்துவனையின் Chief Executive officer ஆன சந்தானம் கூறுகையில், கொரோனா நோயாளியாக தான் அவர் மருத்துவமனையில் வந்து சேர்ந்தார். சிகிச்சைக்கு பிறகு அவர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார். ஆனால் கொரோனாவுக்கு பிறகு ஏற்பட்ட பாதிப்புகளாலேயே அவரின் உடல்நிலை மோசமடைந்தது. வயது முதிர்வின் காரணமாக கொரோனா பாதிப்புக்களால் அவரின் உடல் உறுப்புகள் பலவும் செயலிழந்தன. அது தான் அவர் உயிரிழக்க காரணமாக அமைந்து விட்டன.

சிவாஜி பார்க்கில் லதா மங்கேஷ்கர் உடல்

சிவாஜி பார்க்கில் லதா மங்கேஷ்கர் உடல்

இன்று காலை 8.12 மணிக்கு லதா மங்கேஷ்கரின் உயிர் பிரிந்தது. அவரது உடலை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவமனையில் இருந்து நேராக சிவாஜி பார்க்கிற்கு லதா மங்கேஷ்கரின் உடல் எடுத்துச் செல்லப்பட உள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்பட உள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X