என்னது...தனுஷ் உங்களுக்கு அண்ணனா?...பாலிவுட் ஹாட் நடிகை பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்
மும்பை : கோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட்டையும் கலக்கி வருகிறார் நடிகர் தனுஷ். சமீபத்தில் ஹாலிவுட்டில் இவர் நடித்து வெளியான தி கிரே மேன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரூசோ ப்ரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் படத்தை நெட்ஃபிளிக்ஸ் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்திருந்தது. இந்த படம் தியேட்டரை தொடர்ந்து சமீபத்தில் ஓடிடியிலும் ரீலீஸ் செய்யப்பட்டது. Ryan Gosling, Chris Evans ஆகியோருடன் தனுஷ் மிரட்டி இருந்தார்.
தி கிரே மேன் படத்தில் Avik San என்ற கொலைகாரன் கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார். சில நிமிடங்களே வந்தாலும் தனுஷின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றாலும், தனுஷிற்காக ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து வருகின்றனர்.

தனுஷ் உடன் நெருக்கம்
தி கிரே மேன் படம் ரிலீசானதை கொண்டாடும் விதமாக பிரபலங்கள் பலருக்கு படக்குழு சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் மீடியாக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்தது சாரா அலிகான், தனுஷ் உடன் நெருக்கம் காட்டியது தான்.

தனுஷை கட்டிப்பிடித்த பாலிவுட் பியூட்டி
அத்ரங்கி ரே படத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த போதே இந்த ஜோடிக்கு பாலிவுட்டில் பெரும் வரவேற்பு இருந்தது. இந்த சமயத்தில் விருந்து நிகழ்ச்சியில், தனுஷை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார் சாரா. பிறகு தனுஷூடன் கைகோர்த்து சுற்றி வந்தது, ஒன்றாக மீடியாக்களுக்கு நன்றி சொன்னது என தனுஷூடன் தான் சாரா சுற்றி வந்தார்.

என்னது தனுஷ் உங்களுக்கு அண்ணனா
இவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்கள் செம வைரலாகின. இந்த சமயத்தில் தனுஷை தனது அண்ணன் என சாரா சொல்லி உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்தரங்கி ரே படம், தற்போது விருந்து நிகழ்ச்சியில் தனுஷ் உடன் மிக நெருக்கமாக இருந்து வந்த சாரா, திடீரென தனுஷை அண்ணா என சொல்வதற்கு என்ன காரணம் என புரியாமல் பலரும் குழம்பிப் போய் உள்ளனர். பாலிவுட் ஹாட் நடிகையான சாரா, தனுஷை அண்ணா என குறிப்பிட்டிருப்பது அனைவரையும் கொஞ்சம் யோசிக்க தான் வைத்துள்ளது.

வரிசை கட்டும் படங்கள்
தனுஷிற்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் ரிலீசாக உள்ளது. இதில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படமும் ரிலீசிற்கு தயாராகி உள்ளது.இந்த படங்களைத் தொடர்ந்து தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலில் உருவாகி உள்ள வாத்தி படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். வெங்கி அட்லுரி இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நாளை மற்றும் நாளை மறுநாள் ரிலீஸ் செய்யப்பட உள்ளன.

எத்தனை படங்கள்
விரைவில் ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தின் ஷுட்டிங்கிலும் தனுஷ் இணைய உள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தனுஷ் நடித்த படங்கள் வரிசையாக ரிலீசிற்கு காத்திருக்கும் சமயத்தில், பல புதிய படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் தனுஷ்.


Click it and Unblock the Notifications











