விஜய்யின் வாரிசு ஃபர்ஸ்ட் லுக் எப்படி இருக்கு... ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

சென்னை : விஜய் நடித்து வரும் அவரின் 66 வது படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று படக்குழு அறிவித்தது. அதோடு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

Recommended Video

Varisu Firstlook | Fans Review | Thalapathy Birthday Celebration | *Kollywood

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒரு புறம் வரவேற்பை பெற்றாலும், மறுபுறம் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

விஜய்யின் வாரிசு படம் 2008 ல் வெளிவந்த Larco Winch என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என இரு படங்களின் போஸ்டர்களையும் ஒப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார் ப்ளூசட்டை மாறன். ஆனால் ரசிகர்கள் இந்த ஃபர்ஸ்ட்லுக் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.

மீண்டும் எடுக்கப்படும் சீன்கள்

மீண்டும் எடுக்கப்படும் சீன்கள்

தளபதி 66 என்ற பெயரில் எடுக்கப்பட்டு வரும் விஜய்யின் வாரிசு படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தை தொடர்ந்து சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் சில போட்டோக்கள் லீக் ஆனதால், அந்த சீன்களை வேறு மாதிரி மீண்டும் எடுக்க டைரக்டர் வம்சி பைடபள்ளி முடிவு செய்திருக்கிறார்.

லைக்குகளை அள்ளும் ஃபர்ஸ்ட்லுக்

லைக்குகளை அள்ளும் ஃபர்ஸ்ட்லுக்

இந்த படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்டாக ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறது. The boss returns என்ற வாசகம் செம டிரெண்டாகி உள்ளது.

என்னது ஹாலிவுட் காப்பியா

என்னது ஹாலிவுட் காப்பியா

பெரும்பாலான நெட்டிசன்கள், வாரிசு படத்தின் பேக்கிரவுண்ட், டைட்டில் எழுதப்பட்டுள்ள விதம் குறித்து பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். வாரிசு படத்தின் பேக்கிரவுண்ட், கூகுளில் இருந்து எடுத்து கட், காப்பி, பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது, கபாலி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் காப்பி என்று சொல்லி வருகின்றனர்.

வாரிசு ஃபர்ஸ்ட்லுக் எப்படி இருக்கு

வாரிசு ஃபர்ஸ்ட்லுக் எப்படி இருக்கு

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் லைக்குகளை குவித்து வந்தாலும், விஜய் கடைசியாக நடித்த 5 படங்களின் ஃபர்ஸ்ட்லுக்குடன் ஒப்பிட்டு பார்க்கையில் ரொம்பவே மோசம் என்று தான் பலர் சொல்லி வருகின்றனர். ரொம்ப சுமார் ரகம், பேக்கிரவுண்ட் செயற்கை தனமாக உள்ளது, லோ கிரேண்ட் என்ற விதத்திலேயே உள்ளது என்று தான் சொல்கிறார்கள்.

தெலுங்கு பட ஃபர்ஸ்ட்லுக்

தெலுங்கு பட ஃபர்ஸ்ட்லுக்

இருந்தாலும் டைரக்டர் வம்சி பைடபள்ளியின் முந்தைய படங்களின் ஃபர்ஸ்ட்லுக்குடன் ஒப்பிடுகையில் வாரிசு பரவாயில்லை என்றே சொல்லப்படுகிறது. அவர் தெலுங்கு பட டைரக்டர் என்பதால், அந்த ஸ்டைலிலேயே ஃபர்ஸ்ட்லுக்கை அமைத்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் கருத்து என்ன

ரசிகர்களின் கருத்து என்ன

பொதுவாக தெலுங்கில் படங்களின் ஃபர்ஸ்ட்லுக்குகள் சுமாராக தான் இருக்கும். ஆனால் கடைசியில் படங்களை செம ஹிட் ஆக்கி விடுவார்கள். அதனால் விஜய்யின் வாரிசு படத்தின் ஃபர்ஸ்லுக்கை வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட வேண்டாம். படத்தை நிச்சயம் ஹிட் ஆக்கி விடுவார்கள் என்பதே விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X