»   »  கபாலி வசூலை விடுங்க... கேன்டீன் பிஸினஸ் மூலம் தியேட்டர்கள் குவிக்கும் கோடிகள் எவ்வளவு?

கபாலி வசூலை விடுங்க... கேன்டீன் பிஸினஸ் மூலம் தியேட்டர்கள் குவிக்கும் கோடிகள் எவ்வளவு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தின் வசூல் ரூ 500 கோடி, 660 கோடி என்று பல புள்ளி விவரங்கள் வந்தவண்ணம் உள்ளன.

பைனான்ஷியல் எக்ஸ்பிரஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், பிரபல செய்தி ஏஜென்சி பிடிஐ உள்ளிட்ட வடக்கத்திய ஆங்கில ஊடகங்கள் இந்தப் படம் ரூ 650 கோடியைத் தாண்டிவிட்டதென்று கற்பூரமடிக்காத குறையாக சத்தியம் செய்கின்றன. அதாவது பிகே, பாகுபலியை வீழ்த்தி முதலிடத்தில் ரஜினியின் இந்தப் படம் உள்ளதாக அறிவித்துள்ளன.


How Kabali generates revenue through canteens and parking?

அதற்கான விளக்கங்கள், கணக்குகளையும் கொடுத்துள்ளன. அவை ஒரு பக்கம் இருக்கட்டும். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பார்த்துக் கொள்வார்.


இப்போது டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த தொகையைவிட, தியேட்டர்களில் கேன்டீன் விற்பனை மற்றும் வாகன பார்க்கிங் கட்டணங்கள் மூலம் கிடைத்த தொகை எவ்வளவு இருக்கும்? அதை ஏன் யாரும் கணக்கில் எடுப்பதில்லை என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


டிக்கெட் கட்டணத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன், குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் விலை. சாதாரண அரங்குகளில் கட்டணம் ரூ 100 என்றால், அங்கு விற்கப்படும் திண்பண்டங்கள் வாங்க ஒரு நபருக்கு குறைந்தது ரூ 200 ஆவது தேவை.


பெரிய மால்களில் பாப்கார்ன் விலை ரூ 130 - 180. குளிர்பானம் ரூ 120 - 150.


நகர்ப் பகுதிகளில் நான்கு பேர் கொண்ட குடும்பம் டிக்கெட்டுக்கு 500 ரூ செலவழித்தால், இந்த மாதிரி திண்பண்டம் வாங்க ரூ 1200 செலவழிக்க வேண்டியுள்ளது.


சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற அரங்குகளில் இந்த விலை பாதியாக உள்ளது.


அதே போல பார்க்கிங் கட்டணம் முக்கிய வருவாய் ஆகிவிட்டது. குறைந்தது 20 முதல் அதிகபட்சம் ரூ 200 வரை பார்க்கிங் கட்டணங்கள் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன. மால்களில் நடக்கும் பார்க்கிங் கொள்ளைப் பற்றி புலம்பாதவர்களே இல்லை.


இவற்றைக் கணக்கிலெடுத்துப் பார்த்தால், கபாலி திரையிட்டதன் மூலம் தியேட்டர்காரர்கள் கேன்டீன்களில் சம்பாதித்தது எத்தனை கோடிகள் எனத் தெரியவரும். பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் தரும் விளக்கத்தின்படி ரூ 1000 கோடிக்கு மேல் இந்த கேன்டீன்கள், பார்க்கிங் கட்டணங்கள் மூலம் மட்டுமே வருமானம் கிடைத்திருக்கும் என்கிறார்கள்.


இந்தத் தொகை முழுக்க முழுக்க தியேட்டர்காரர்களுக்குத்தான். அல்லது கேன்டீனை குத்தகைக்கு எடுத்து நடத்துபவர்களுக்குக் கிடைக்கும். தயாரிப்பாளருக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை.


கபாலியைப் பொறுத்த முதல் நாளிலிருந்து இன்று வரை கூட்டம் கட்டி ஏறுகிறது அரங்குகளில். வாகனங்கள் நிறுத்த இடமில்லை. பீனிக்ஸ், பேலஸோ போன்ற மால்களில் 11 வது லெவல் வரை போக வேண்டியிருக்கிறது கார்களை நிறுத்த.


கபாலி டிக்கெட் வருவாயை விட பல கோடிகள் அதிகமாக இந்த கேன்டீன் பிஸினஸ் மூலம் தியேட்டர்காரர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

English summary
Here is a calculation of how theater owners earn money through canteen and parking business during Kabali release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil