twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலுவுக்கு முதல் பட வாய்ப்பு இப்படி தான் கிடைத்தது.. ராஜ்கிரண் சொன்ன ஸ்வாரஸ்ய தகவல்!

    |

    சென்னை:1991 ஆம் ஆண்டு நடிகர் ராஜ்கிரண், மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் என் ராசாவின் மனசிலே.

    என் ராசாவின் மனசிலே படத்தை எழுதி இயக்கியவர் கஸ்தூரிராஜா. இந்த படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் கஸ்தூரிராஜா.

    இந்த படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இந்த படத்தின் மூலம் தான் நடிகர் வடிவேலு சினிமாத்துறைக்கு அறிமுகமானார். நடிகர் வடிவேலுக்கு நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை நடிகர் ராஜ்கிரன் சுவாரசியமாக கூறியுள்ளார்.

    ஏகே 61 டைட்டில் - ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி இதுதான்...சென்டிமென்டை விடாத போனி கபுர் ஏகே 61 டைட்டில் - ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி இதுதான்...சென்டிமென்டை விடாத போனி கபுர்

    தயாரிப்பாளராக ராஜ் கிரண்

    தயாரிப்பாளராக ராஜ் கிரண்

    நடிகர் ராஜ்கிரன் நடிப்பதற்கு முன்பே தயாரிப்பாளராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசா தான், போன்ற பல படங்களை தயாரித்தவர் நடிகர் ராஜ்கிரண். 90களில் இவர் நடித்து வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. ஹீரோவாக மட்டும் இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் ராஜ் கிரண்.

    இளம் ஹீரோக்கள்

    இளம் ஹீரோக்கள்

    ராஜ்கிரண் நடித்த நந்தா, பாண்டவர் பூமி, கோவில், சண்டக்கோழி, கிரீடம், முனி, ரஜினி முருகன், மஞ்சப்பை, பா பாண்டி போன்ற பல படங்கள் இவரது நடிப்புக்கு பெயர் போனவை. வடிவேலுக்கு நடிக்கும் வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது என்பதை பற்றி நடிகர் ராஜ்கிரன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், வடிவேலு தானாக வந்து வாய்ப்பு கேட்கவில்லை, நான் தயாரிப்பாளராக இருக்கும் பொழுது எனக்கு பல ரசிகர்கள் இருந்தார்கள்.

    ரசிகர் திருமணம்

    ரசிகர் திருமணம்

    ஒரு ரசிகரின் திருமண சமயத்தில், நீங்கள் திருமணம் நடத்தி வைத்தால் மட்டுமே நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். ஆதனால் அவரது திருமணத்திற்கு நான் மதுரைக்கு சென்று இருந்தேன். காலை திருமணம் முடிந்த பிறகு, அன்று இரவு தான் எனக்கு ட்ரெயின். இரவு ட்ரெயின் ஏறும் வரை உங்களுக்கு துமையாக ஒருவரை இருக்க சொல்கிறேன் என்று துணைக்கு அனுப்பினார். அப்படி துணைக்கு இருக்க வந்த பையன் தான் வடிவேலு. சினிமாவில் நடிக்க அவரும் என்னிடம் வாய்ப்பு கேட்கவில்லை, எனக்கும் அது பற்றி எந்த ஒரு யோசனையும் இல்லை. நேரம் செலவழிக்கவே நான் வடிவேலுவுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

    தேடி கொடுத்த வாய்ப்பு

    தேடி கொடுத்த வாய்ப்பு

    இந்த சம்பவம் நடந்து இரண்டு மூன்று வருடங்கள் கழித்து நான், என் ராசாவின் மனசிலே படத்தை தயாரிக்கும் சமயத்தில். ஒரு சின்ன கதாபாத்திரத்துக்கு ஆள் தேவைப்பட போது எனக்கு வடிவேலுவின் ஞாபகம் வந்தது. மீண்டும் அவரை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான், அப்போது திருமணமான என் ரசிகர் எனக்கு அனுப்பிய கடிதங்களை எடுத்து பார்க்க சொல்லி என் ஆபீஸில் இருபவரிடம் சொன்னேன். அந்த சமயத்தில் பல ரசிகர்கள் எனக்கு கடிதங்கள் அனுப்புவார்கள், ஆனால் அவர் மட்டுமே கடிதத்தில் சீல் அடித்து அனுப்பி இருப்பார். அந்த சீலில் தொலைபேசி எண் இருக்கும் அதை எடுத்து அவரை அழைத்து பேசி காலையில் திண்டுக்கல்லுக்கு ஷூட்டிங்க்கு வரச் சொல்ல சொன்னேன். அப்பொழுது நடிக்க வந்தவர் தான் நடிகர் வடிவேலு.

    சின்ன கதாபாத்திரம்

    சின்ன கதாபாத்திரம்

    என் ராசாவின் மனசிலே படத்தில் கிளி ஜோசியரிடம் ஜோசியம் பார்க்கும் நபராக வடிவேல் நடித்திருப்பார். அதே படத்தில் கவுண்டமணியிடம் அடிவாங்கும் ஒரு சீனிலும் நடித்திருப்பார் வடிவேலு. இதுவே இவருக்கு முதல் படமாக அமைந்தது அதன் பிறகு பல படங்களில் நடித்து இன்று முன்னணி காமெடியன்களில் ஒருவராக உள்ளார் வடிவேலு. இந்த சுவாரசிய தகவல்களை நடிகர் ராஜ்கிரண் பகிர்ந்துள்ளார்.

    English summary
    How Vadivelu Got Chance to act In his First Movie Reveals Actor Rajkiran
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X