»   »  இஸ்தான்புல் தாக்குதல்: உயிர்தப்பிய பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்

இஸ்தான்புல் தாக்குதல்: உயிர்தப்பிய பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: துருக்கி தலைநகர் இஸ்தான்புல் விமானநிலையத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இருந்து பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் உயிர் தப்பியுள்ளார். தனக்கு உதவிய நல்ல உள்ளங்கள், விமானப்படை ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Hrithik Roshan was at Istanbul airport hours before attack

நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன் மகன்களுடன் துருக்கிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று நாடு திரும்புவதற்காக இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு அவர் வந்திருந்தார். அவர் பயணம் செய்யவிருந்த விமானத்தைத் தவறவிட்ட நிலையில் அடுத்த விமானத்திற்காக காத்திருந்தார். மறுநாள்தான் விமான பயணம் என்று முடிவு செய்திருந்த நிலையில் திடீரென வேறு விமானத்தில் அவர்கள் நாடு திரும்பினர்.

ஹிருத்திக் ரோசன் விமானம் ஏறிய சில மணிநேரங்களிலேயே இஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 36 அப்பாவி மக்கள் பலியாகினர்.

நாடு திரும்பியதும் தனக்கு உதவி செய்த இஸ்தான்புல் விமான நிலையப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இஸ்தான்புல் தாக்குதலில் இறந்தவர்கள்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தீவிரவாதத்திற்கு எதிராக ஒருமித்த குரலில் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Hrithik Roshan was at Istanbul airport hours before attack

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil