பில்லா 2 வில் நான் தான் அஜித்துடன் நடிக்க வேண்டியது...ஏக்கத்தை சொன்ன பிரபல நடிகை

மும்பை : 10 வருடத்திற்கு முன்பு பில்லா 2 படத்திலேயே நான் தான் அஜித்துடன் சேர்ந்து நடிக்க வேண்டியது. ஆனால் அந்த வாய்ப்பு மிஸ்ஸாகி விட்டது. அதற்கு பிறகு இப்போது தான் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரபல பாலிவுட் நடிகையும், வலிமை பட நடிகையுமான ஹுமா குரேஷி தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் வலிமை படம் பற்றி தினம் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

செம மாஸ் காத்திருக்கு

செம மாஸ் காத்திருக்கு

அஜித்தின் மாஸ் ஆக்ஷனால் தியேட்டரில் வலிமை படத்தை பார்க்கும் போது காதுகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என டைரக்டரும், நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் ட்விட்டரில் கூறி இருந்தார். ரசிகர்கள் அதிகம் கேட்டு வருவதால் வலிமை 2 உருவாக்க உள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார். வலிமை படத்தின் சவுண்ட் சர்வதேச தரத்தில் இருப்பதாக படத்தின் ஆடியோ மிக்சிங் இன்ஜினியர் ராஜாகிருஷ்ணமும் தெரிவித்துள்ளார்.

வலிமையில் வித்தியாசமான ரோல்

வலிமையில் வித்தியாசமான ரோல்

அதிக அளவிலான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட வலிமை படத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடித்துள்ளார். இவரது ஃபிரண்டாக ஹுமா குரேஷியும் போலீஸ் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஹுமா பேசி உள்ளார். அதில் அவர், மும்பையில் போனி கபூர் ஆபீசில் வைத்து தான் டைரக்டர் வினோத் என்னிடம் கதையை சொன்னார். வித்தியாசமான ரோல் என்பதால் மிகவும் பிடித்திருந்தது. முதல் முறையாக போலீஸ் ரோலில் நடித்துள்ளேன். நெகடிவ் ஷேட் இல்லாத ரோல்.

பிரியாணி சமைத்து கொடுத்த அஜித்

பிரியாணி சமைத்து கொடுத்த அஜித்

வலிமை ஷுட்டிங்கிற்கு செல்லும் போது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பில்லா 2 படத்திலேயே அஜித்துடன் நான் நடிக்க வேண்டியது. ஆனால் அது மிஸ்ஸாகி தற்போது தான் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வலிமை பட ஷுட்டிங் போது அஜித்தை முதல் முறையாக பார்த்தேன். செட்டில் உள்ள அனைவருக்கும் அஜித் பிரியாணி சமைத்து கொடுத்தார். எல்லோரிடமும் சமமாக பழகக் கூடியவர். ஷுட்டிங்கின் போது ஒருநாள் ஷாலினி வந்திருந்தார். அவருடன் பேசியது மறக்க முடியாத அனுபவம்.

அஜித் கூட டூயட் பாட முடியல

அஜித் கூட டூயட் பாட முடியல

எனக்கு தமிழில் வசனங்கள் பேச அஜித் மற்றும் டைரக்டர் தான் உதவினார்கள். அஜித்துடன் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவருடன் டூயட் பாட முடியாமல் போனது வருத்தம். இந்த படத்தில் வரும் பைக் சாகச காட்சிகள் மிகவும் கவருவதாக உள்ளது. எனக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும். சண்டை காட்சிகள் அதிர வைப்பதாக உள்ளன.

தொடர்ந்து தமிழில் நடிக்க தயார்

தொடர்ந்து தமிழில் நடிக்க தயார்

காலா படத்திற்கு பிறகு தமிழில் நிறைய வாய்ப்புக்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. வாய்ப்புக்கள் கிடைத்தால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க தயாராக உள்ளேன். தமிழ் படத்தில் நடிப்பதற்கும், இந்தி படத்தில் நடிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நடிப்பு தான் பேசும். மொழி முக்கியமில்லை. தற்போது இந்தியில் சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X