»   »  ரஜினி பக்கத்தில் மரம் மாதிரி நிற்கச் சொன்னாலும் நிற்பேன்: ஹூமா குரேஷி

ரஜினி பக்கத்தில் மரம் மாதிரி நிற்கச் சொன்னாலும் நிற்பேன்: ஹூமா குரேஷி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை:

ரஜினிக்காக மரம் மாதிரி படத்தில் நிற்கச் சொன்னால் கூட சந்தோஷப்படுவேன் என்று நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. காலா படத்தில் நடிப்பது குறித்து அவர் பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Huma Qureshi is impressed by Rajini

அந்த பேட்டியின்போது அவர் கூறியதாவது,

ரஜினி சாருடன் பணியாற்றுவது அருமையான அனுபவம். அவர் நடந்தால் அனைவரும் அமைதியாக அவருக்கு வழிவிடுவார்கள். அவரது எளிமை தான் என்னை வியக்க வைக்கிறது.

ஒரு சூப்பர் ஸ்டார் இவ்வளவு எளிமையாக இருப்பதை நான் இதுவரை பார்த்ததே இல்லை. ரஜினி அருகில் மரம் போன்று என்னை நிற்க வைத்தாலும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் நல்ல வேளை ரஞ்சித் எனக்கு பெரிய ரோல் கொடுத்துள்ளார்.

காலா எனக்கு ஸ்பெஷலான படம். காரணம் இது ரஜினி சார் படம் என்றார்.

English summary
Actress Huma Qureshi said that even if she was made to stand like a tree next to Rajinikanth, she would have been very happy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil