விக்னேஷ் சிவனோட எழுத்துக்கு நான் அடிமை.. விஜய் சேதுபதியே மயங்கிட்டாராம்!

சென்னை : போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்

அஜித்தின் 62வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் அடுத்த வருடம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது

விக்னேஷ் சிவனுடன் நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள விஜய் சேதுபதி வினேஷ் சிவனின் எழுத்துக்கு நான் அடிமை என தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஃபேவரிட் படமாக

ஃபேவரிட் படமாக

காதல் படங்களை இப்போது உள்ள தலைமுறைக்கு பிடிக்கின்றவாரும் ட்ரெண்டிங்காகவும் இயக்குவதில் மிகச் சிறந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் முதல் படத்திலேயே தன்னை ஒரு மிகச் சிறந்த காதல் இயக்குனராக நிரூபித்திருப்பார். வித்தியாசமான காதல் கதையாக வெளியான போடா போடி அப்போது சுமாரான வெற்றியைப் பெற்றலும் இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கக் கூடிய ஃபேவரிட் படமாக இருந்து வருகிறது. போடா போடி வெற்றியைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் என்ற மெகா ஹிட் வெற்றி பெற்றது.

சாப்டான ரவுடியாக

சாப்டான ரவுடியாக

விஜய் சேதுபதி, நயன்தாராவின் கலக்கலான நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது அதுவரை முரட்டுத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் படத்தில் சாப்டான ரவுடியாகவும் அதேபோல நயன்தாரா காது கேட்காத பெண்மணியாகவும் நடித்திருந்தது ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.

ட்ரெண்டிங் காதல் கதை

ட்ரெண்டிங் காதல் கதை

அதைத் தொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். இந்த படம் பிரபல இந்தி படத்தின் தமிழ் ரீமேக் என பேசப்பட்டது. இந்த நிலையில் நானும் ரவுடி தான் கூட்டணி மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல் ஒரு காதலன் இரண்டு காதலிகளை மையப்படுத்தி முக்கோண காதல் கதையாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. காதல் காமெடி கவர்ச்சி என அனைத்தும் நிரம்பிய ட்ரெண்டிங் காதல் கதையாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இந்த முறை விஜய்சேதுபதி நயன்தாரா உடன் சமந்தாவும் இணைந்து கலக்கியுள்ளனர்.

Recommended Video

ரசிகர்களுடன் #KRK படத்தை பார்க்க வந்த விஜய்சேதுபதி மகன்
விக்னேஷ் சிவனின் வரிகளுக்கு நான் அடிமை

விக்னேஷ் சிவனின் வரிகளுக்கு நான் அடிமை

அடுத்ததாக அஜித்குமாரின் 62வது படத்தை இயக்க ஆயத்தமாகி வரும் விக்னேஷ் சிவன் பொதுவாக இயக்குவதை விட எழுவதில் தனக்கு மிகவும் ஆர்வம் உள்ளது என பல பேட்டிகளில் கூறி உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி அதில் விக்னேஷ் சிவனின் வரிகளுக்கு நான் அடிமை. அவர் எழுதும் வரிகள் அவ்வளவு இனிமையாக இருக்கும். நானும் ரவுடிதான் மற்றும் காத்துவாக்குல என்று காதல் படங்களின் பாடல்களை மிக அற்புதமாக எழுதியுள்ளார். அது அவருக்கு சரளமாக வருகிறது. என விக்னேஷ் சிவன் குறித்து விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X