நான் தலைமறைவா? அடப்பாவிகளா.. கோயிலுக்கு போயிருந்தேன்யா.. கிளப்பிவிட்டாய்ங்க.. பிரபல நடிகர் விளக்கம்!
சென்னை: தான் தலைமறைவானதாக வெளியான தகவலுக்கு நடிகர் வடிவேலு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு.. தன்னைத்தானே டேமேஜ் செய்து கொண்டு மக்களுக்கு சிரிப்பு மருந்து கொடுக்கும் சிறந்த நடிகர். இவரது காமெடிகள் யார் மனதையும் சட்டென புண்படுத்திவிடாது.
இவரது பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரிக்கு என ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் நடிகர் வடிவேலு.

தலைவன் இருக்கின்றான்
இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததற்காக புதிய படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

தயாரிப்பாளர் சதீஷ்
ஆனால் அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில் வடிவேலுவை வைத்து எலி படத்தை தயாரித்த சதீஷ்குமார் தனக்கு அந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டினார்.

வடிவேலுவால் நஷ்டம்
வடிவேலுவை வைத்து படம் எடுப்பதற்காகவே தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாகவும் அவர் நடித்த எலி படத்தினால் தனக்கு ரூ.14 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார். தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் வடிவேலு 2 படங்களில் நடித்துக்கொடுப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

போலீஸில் புகார்
ஆனால் நடிகர் வடிவேலு கூறியப்படி நடந்துகொள்ளவில்லை என்றும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிரட்டுகிறார் என்றும் பரபரப்பு புகாரை கூறினார். இது குறித்து போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டது.

வடிவேலு விளக்கம்
இந்நிலையில் நடிகர் வடிவேலு போலீஸ்க்கு பயந்து தலைமறைவாகி விட்டார் என்றும் தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன. இந்நிலையில் இதுகுறித்து நடிகர் வடிவேலு விளக்கம் அளித்துள்ளார்.

களங்கம் ஏற்படுத்தவும்
அதாவது தான் யாருக்கும் மிரட்டல் விடுக்கவில்லை என்றும் தன்னை களங்கப்படுத்தவும், எதிர்காலத்தை வீணாக்கவும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று கூறியுள்ளர்.


Click it and Unblock the Notifications











