»   »  அந்த சாதனைக்கு ஒரு நாளுக்கு முன்பு இறந்துவிட்டார் ஸ்ரீதேவி: பிரபல நடிகர் பேட்டி

அந்த சாதனைக்கு ஒரு நாளுக்கு முன்பு இறந்துவிட்டார் ஸ்ரீதேவி: பிரபல நடிகர் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீதேவியின் மிக பெரிய ரசிகன் நடிகர் ஜிதேந்திரா!- வீடியோ

மும்பை: ஸ்ரீதேவியின் மரணத்தால் பேரதிர்ச்சியில் இருப்பதாக பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி சொல்வா சாவன்(1979) படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயின் ஆனாலும் ஜிதேந்திராவுடன் சேர்ந்து நடித்த ஹிம்மத்வாலா(1983) படம் தான் அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது.

இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்து நடிகர் ஜிதேந்திரா கூறியிருப்பதாவது,

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஹிம்மத்வாலா படத்தில் ரேகா தான் ஹீரோயினாக நடிக்க வேண்டி இருந்தது. அவர் நடிக்க முடியாமல் போக ஸ்ரீதேவி நடித்தார். அந்த படம் மூலம் தான் எனக்கும், ஸ்ரீதேவிக்கும் நல்ல பெயரும், புகழும் கிடைத்தது என்பது அனைவருக்குமே தெரியும்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஸ்ரீதேவியின் மரணத்தால் பேரதிர்ச்சி அடைந்துள்ளேன். ஹிம்மத்வாலா படத்திற்கு பிறகே ஸ்ரீதேவியின் மேஜிக்கை பாலிவுட் கண்டுகொண்டது. ஹிம்மத்வாலா ரிலீஸாகி பிப்ரவரி 25ம் தேதியுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அந்த கொண்டாட்டத்திற்கு ஒரு நாளைக்கு முன்பு ஸ்ரீதேவி இறந்துவிட்டார்.

தமிழ் படம்

தமிழ் படம்

ஸ்ரீதேவி நடித்த தமிழ் படம் ஒன்றின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தான் நான் அவரை முதலில் சந்தித்தேன். பெரிய அழகிய கண்களுடைய அவரை பாராட்டினேன்.

படம்

படம்

தீதார் இ யார் படம் சரியாக போகாததால் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பெரும் கவலையில் இருந்தேன். சொல்வா சாவன் சரியாக போகாததால் ஸ்ரீதேவியை பாலிவுட் கண்டுகொள்ளவில்லை. எங்கள் இருவருக்குமே திருப்பு முனையாக அமைந்த படம் ஹிம்மத்வாலா.

மறக்க முடியுமா?

மறக்க முடியுமா?

எனக்கு நெருக்கமான சக நடிகைகளில் ஸ்ரீதேவியும் ஒருவர். அவரும் நானும் சேர்ந்து 15 படங்களில் நடித்துள்ளோம். அவர் அருமையான நடிகை. ஸ்ரீதேவியுடன் டான்ஸ் ஆட வேண்டும் என்றாலே எனக்கு பதட்டமாக இருக்கும். அவர் சூப்பராக ஆடுவார். ஸ்ரீதேவி உயிரோடு இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றார் ஜிதேந்திரா.

English summary
Bollywood actor Jeetendra said in an interview that the legendary actress passed away one day before the 35th anniversary of their superhit movie Himmatwala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil