100 கோடி வசூல் எனக்கு வராது.. டான் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் 25 நாள் வெற்றிகரமாக ஓடி 125 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டி உள்ளது.
இந்நிலையில், டான் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் என்கிட்ட ட்ரீட் கேட்காதீங்க என கலகலப்பாக பேசியுள்ளார்.
மேலும், அந்த 100 கோடி வசூல் எனக்கு வராதுப்பான்னும் அவர் பேசியிருப்பது டிரெண்டாகி வருகிறது.
Recommended Video

டபுள் செஞ்சுரி
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை குவித்த நிலையில், அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அடுத்த படமும் 100 கோடி வசூல் ஈட்டியுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் டபுள் செஞ்சுரி அடித்துள்ளார் என ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

வெற்றி விழா
டான் படத்தின் சக்சஸ் மீட் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் இந்த படம் நான் பண்ண வேண்டிய படம் என பேசி சிவாவுக்கே ஷாக் கொடுத்தார். மேலும், சிவகார்த்திகேயன் பேசும் போது 5 நிமிஷம் ட்ரிம் பண்ண சொன்னாங்க, நாங்க எக்ஸ்ட்ரா ஒரு சீன் வச்சிட்டோம் என பேசி, எங்கே கட் வைப்பது என்றே தெரியவில்லை என கலகலப்பாக பேசினார்.

100 கோடி எனக்கு வராது
டான் படத்தின் வெற்றிக்காக சில நண்பர்கள் ட்ரீட் கேட்கிறாங்க, அதான் 100 கோடிக்கு மேல் வசூல் வந்திருக்கே ட்ரீட் வை என சொல்கின்றனர். அந்த 100 கோடி எனக்கு வராது, நீங்க ட்ரீட் கேட்கணும்னா லைகா நிறுவனம் அல்லது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திடம் கேளுங்க என சிவகார்த்திகேயன் பேசி உள்ளார்.

கோலிவுட் கம்பேக்
வலிமை, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் உள்ளிட்ட படங்களால் சற்றே சரிவை சந்தித்த கோலிவுட் காத்துவாக்குல ரெண்டு காதல், டான் மற்றும் விக்ரம் படத்தால் மீண்டும் மிகப்பெரிய அளவில் கம்பேக் கொடுத்துள்ளது. இந்த வெற்றிப் பாதை தொடர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். நல்ல படங்களை இயக்குநர்கள் கொடுத்தாலே போதும் மற்றதை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்.


Click it and Unblock the Notifications











