ரொம்ப அவமானமா இருக்கு சார்...எதற்காக பிரியங்கா இப்படி சொன்னார் ?
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 பரபரப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது. பதினோறாவது வாரத்தின் இறுதியில் வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் அபினய் தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் அந்த பரபரப்பையும் மிஞ்சி விட்டது நேற்று அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்தது. இதனால் ரசிகர்கள், இந்த வாரம் தப்பான ஆள வெளியேற்றி விட்டோமோ என யோசிக்க துவங்கி விட்டனர்.

அவமானமா இருக்கு சார்
நிகழ்ச்சியின் 77 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரியங்கா ரொம்ப அவமானமா இருக்கு சார் என கமலிடம் சொல்கிறார். அமீர், பாவனிக்கு ஆதரவு அளித்ததற்கு தான் பிரியங்கா இப்படி வருத்தப்பட்டாரா என்றால் கிடையாது.

பிரியங்காவை கலாய்த்த கமல்
இன்றைய முதல் ப்ரோமோவில் கமல் பேசுகையில், பஸ் டாஸ்கின் போது பீட்சாவிற்காக இறங்கியவர்களை கூட நான் பார்த்தேன் என கலாய்க்கிறார். இதை கேட்டு, ரொம்ப அவமானமா இருந்தது சார். முதல் முறையாக வெஜ் பிசா அனுப்பியதால், பெரிசு-பிக்பாசே நான் பஸ்சில் இருந்து இறங்க வேண்டும் என நினைக்கிறாரோ என தோன்றியது. இருந்தாலும் நானே இறங்கி இருப்பேன் என்கிறார்.

ஆதரித்த ரசிகர்கள்
நேற்றைய ப்ரோமோவில் கமல், பிரியங்காவை வறுத்தெடுத்த போதும் ரசிகர்கள் பிரியங்காவிற்கு ஆதரவாக கமெண்ட் செய்தனர். இன்றும் பிரியங்கா தான் டைட்டில் வெல்ல வேண்டும். பிரியங்கா ஸ்டிராங் கேர்ள். நல்ல மனசு உள்ளவர். வெளிப்படையாக பேசுகிறார் என பல விதங்களில் பாராட்டி வருகின்றனர்.

நாங்க இருக்கோம்
பிரியங்காவிற்கு, கவலைபடாதீர்கள். நாங்கள் இருக்கிறோம். பிரியங்காவை ஆண்டவர் வறுவறுன்னு வறுத்தெடுக்கிறார். எப்பவுமே இப்படி தானா அல்லது இப்ப தான் இப்படியா என பலர் கேட்டுள்ளனர். இன்னும் சிலர், நீ பிசாவிற்காக இறங்கி விட்டு பிக்பாசை ஏன் குற்றம் சொல்கிறாய் என பலர் பிரியங்காவை கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











