ரொம்ப வல்கரா மெசேஜ் பண்றாங்க.. போனில் தொடர்ந்து டார்ச்சர்.. ட்விட்டரில் குமுறிய விஜே அஞ்சனா

சென்னை: தொலைபேசி மூலமாகவும் இன்ஸ்டாகிராம் மெசேஜ் மூலமாகவும் மோசமான முறையில் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வருவதாக விஜே அஞ்சனா மற்றும் அவரது கணவர் சந்திரன் புகார் அளித்துள்ளனர்.

சன் மியூசிக்கின் பிரபல விஜேவான அஞ்சனா ரங்கனுக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

'கயல்' படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரன் நடிகை அஞ்சனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரபல தொகுப்பாளினி

பிரபல தொகுப்பாளினி

சன் மியூசிக்கில் பிரபல விஜேவாக கலக்கியவர் அஞ்சனா ரங்கன். மேலும், ஏகப்பட்ட இசை வெளியிட்டு விழா மற்றும் சினிமா தொடர்பான விழாக்கள் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அஞ்சனாவுக்கு ஒரு மில்லியனுக்கும் மேல் ரசிகர்கள் உள்ளனர்.

ஆபாச மெசேஜ்கள்

ஆபாச மெசேஜ்கள்

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டோக்களை போட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வரும் அஞ்சனாவுக்கு டைரக்ட் மெசேஜ்களில் சிலர் ஆபாச மெசேஜ்களை அனுப்பி வருவதாகவும், பாலியல் ரீதியான டார்ச்சர்களை கொடுப்பதாகவும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.

போன் பண்ணி டார்ச்சர்

போன் பண்ணி டார்ச்சர்

மேலும், ஒரு போன் நம்பரில் இருந்து தொடர்ந்து அஞ்சனா ரங்கனுக்கு போன் பண்ணி டார்ச்சர் செய்வதாக தற்போது அஞ்சனாவின் கணவரும் நடிகருமான 'கயல்' சந்திரன் ட்விட்டரில் தமிழ்நாடு போலீசாரை டேக் செய்து ட்வீட் போட்டுள்ளார். மேலும், அந்த நபரின் செல்போன் நம்பரையும் பதிவிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பும்

சில ஆண்டுகளுக்கு முன்பும்

கணவரின் ட்வீட்டை தொடர்ந்து விஜே அஞ்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் இதே போன்ற தொல்லைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் ஏற்பட்டது. அப்போதும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு தான் இந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதை விட மோசமான தொல்லைகளை சந்தித்து வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Recommended Video

PSBB ஆசிரியர் Rajagopalan Laptop-ல் மாணவிகளின் ஆபாச போட்டோ.. Police தீவிர விசாரணை
ரொம்ப பயமா இருக்கு

ரொம்ப பயமா இருக்கு

எனக்கு வரும் ஏகப்பட்ட வல்கர் மெசேஜ்களை தொடர்ந்து பிளாக் செய்து வருகிறேன். ஆனால், இந்த மெசேஜ்கள் தொடர்ந்து கொண்டே வந்து என்னை ரொம்பவே பயமுறுத்துகிறது என்றும் மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X