ஜெயராம் போல் ஒரு நடிகரை பார்த்ததில்லை.. அவருடைய நடிப்பில் ஒரு சீக்ரெட் இருக்கு.. கார்த்தி பூரிப்பு!

சென்னை: பிரபல மலையாள நடிகரான ஜெயராம், தமிழிலும் பல படங்கள் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.

Recommended Video

Ponniyin Selvan படத்துல ஒரு Dress கூட கொடுக்கல, Jayaram Speech | PS1 Song lauch *Kollywood

கோகுலம், புருஷ லட்சணம், முறை மாமன் என்று பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் நடிகர் ஜெயராம்.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜெயராம். இவரது நடிப்பு குறித்து கார்த்தி தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

பல தமிழ் படங்கள் ஹிட்

பல தமிழ் படங்கள் ஹிட்

பெரிய இடத்து மாப்பிள்ளை, தெனாலி, பஞ்சதந்திரம், ஜூலி கணபதி, என்று இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இவரது மலையாளம் கலந்த தமிழுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். 90களில் இருந்து இன்று வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் நடிகர் ஜெயராம். துப்பாக்கி, உத்தம வில்லன் போன்ற படங்களில் இவர் நடித்த கதாபாத்திரம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. தற்போது இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

 நட்சத்திர பட்டாளமே இணைத்த PS

நட்சத்திர பட்டாளமே இணைத்த PS

பேன் இந்தியா படமாக வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் என்று நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளனர். இந்த படத்தின் பொன்னி நதி பாடலை ஏ.ஆர் ரஹ்மான் பாடியுள்ளார்.

நடத்திக்காட்டிய மணிரத்னம்

நடத்திக்காட்டிய மணிரத்னம்

பல முன்னணி இயக்குநர்களும், நடிகர்களும் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க முயற்சி செய்த போதிலும் முடியவில்லை. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் இந்த படம் வெளிவர இருப்பது சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆக்கியுள்ளது. இப்படத்தில் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஜெயராம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முக்கியமான கதாபாத்திரம்

முக்கியமான கதாபாத்திரம்

பொன்னியின் செல்வன் கதையில் ஆழ்வார் கடியான் நம்பி கதாபாத்திரம் எந்த அளவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பது பலரும் தெரிந்த ஒன்றே. இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜெயராம். இது குறித்து நடிகர் கார்த்தி கூறுகையில், " படத்தின் கதையை தெரிந்துகொள்வதற்கு ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்கள். ஆனால் கதை தெரிந்த ஒரு படத்தைக் காண இவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்றால் அது பொன்னியின் செல்வன் படத்திற்காக மட்டும் தான் இருக்கும்".

பாக்கியம் செய்தோம்

பாக்கியம் செய்தோம்

"ஜெயராம் போன்ற ஒரு நடிகருடன் நடிப்பது எல்லாம் ஒரு பாக்கியம். அவர் மிகப்பெரிய நடிகன், கலைஞனும் அவார்.

அந்த நடிகனில் இருக்கும் வெறும் "ந" மட்டும் தான் நான், இவர் பொன்னியின் செல்வன் படத்தில் இந்த கதாபாத்திரம் ஏற்று நடத்தது நம்ப முடியாத ஒன்று ,இந்த கதாபாத்திரத்தில் அதிகமான சீக்ரெட் நிறைந்துள்ளது. உண்மையிலேயே ஆழ்வார்கடையான் நம்பி 5.5அடி உயரம் தான். ஆனால் இவர் 6.5 அடி உயரம். அந்த உயரம் கம்மியாக இருப்பதற்கு இவர் ஒரு விஷயம் செய்துள்ளார். அது படத்தை பார்க்கும் போது தெரியும். உங்களுடன் நடித்ததில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்று கார்த்தி நடிகர் ஜெயராமை புகழ்ந்துள்ளார். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்த படத்தை காண ஆவலுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X