அப்பா இறந்ததும், 15 வயதிலேயே வேலை பார்க்க ஆரம்பித்து விட்டேன்.. பிரபல நடிகை உருக்கம்!

By

சென்னை: தனது 15 வயதிலேயே குடும்பத்துக்காக, வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டேன் என்று நடிகை மோனல் கஜ்ஜார் கூறியுள்ளார்.

தமிழில், விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு, கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் படங்களில் நடித்திருப்பவர் மோனல் கஜ்ஜார்.

இந்தி, குஜராத்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். இப்போது சல்மான் கான் தயாரிப்பில் காகஜ் என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.

14 வாரங்கள்

14 வாரங்கள்

இவர், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்டார். மோனல் கஜ்ஜார், குஜராத்தை சேர்ந்தவர். தெலுங்கு சரியாக தெரியாது என்றாலும் பிக் பாஸ் வீட்டில், 98 நாட்கள் வெற்றிகரமாக இருந்தார். இதற்காகவே அவரை பலர் பாராட்டினர். இந்நிலையில் இந்த வீட்டில் 14 வாரங்கள் இருந்த அவருக்கு ரூ.49 லட்சம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சினிமா மற்றும் டிவி

சினிமா மற்றும் டிவி

தெலுங்கு பிக் பாஸில் இருந்து வெளியேறிவிட்டாலும் இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு அதிகமான புகழும் ரசிகர்களும் கிடைத்துள்ளனர். அவருக்கு தெலுங்கில் சினிமா மற்றும் டிவி வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதற்கிடையே, தான் எப்படி நடிப்பை கற்றேன் என்று அவர் கூறியுள்ளார்.

எங்கும் கற்கவில்லை

எங்கும் கற்கவில்லை

இதுபற்றி அவர் கூறும்போது, நான் நடிப்பை எங்கும் கற்கவில்லை. நான் வாழ்வில் பலவித போராட்டங்களைச் சந்தித்து இருக்கிறேன். அதை நடிப்பாக மாற்றுகிறேன். ஒரு நல்ல நடிகராக மாற, அதை இதயத்தில் இருந்து உணர வேண்டும். பிறகு அதை கேரக்டர் மீது வைக்க வேண்டும்.

சகோதரி திருமணம்

சகோதரி திருமணம்

சினிமாவில் வெற்றிபெற நீங்களும் குடும்பத்தினரும் தியாகங்களை செய்ய வேண்டும். என்னுடைய டீனேஜ் பருவம் வேலைகளால் சென்றது. நான், பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது என் சகோதரி திருமணம் செய்து கொண்டார். என்னால் கலந்துகொள்ள முடியவில்லை.

கட்டாயம் ஏற்பட்டது

கட்டாயம் ஏற்பட்டது

என் தந்தை இறந்ததும் நான் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், 15 வயதிலேயே வேலை பார்க்க ஆரம்பித்து விட்டேன். சர்வே செய்யும் வேலையில் ஈடுபட்டேன். பிறகு வங்கியில் வேலை செய்தேன். மாடலிங் துறைக்கு சென்றேன். மிஸ் குஜராத் ஆனேன். பிறகு விளம்பரங்களில் நடித்தேன். பிறகு சினிமாவுக்கு வந்தேன். இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X