»   »  நான் 'அந்த' நடிகையை ரகசியமாக காதலிப்பதில் என் மனைவிக்கு பிரச்சனை இல்லை: நடிகர் ஓபன் டாக்

நான் 'அந்த' நடிகையை ரகசியமாக காதலிப்பதில் என் மனைவிக்கு பிரச்சனை இல்லை: நடிகர் ஓபன் டாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை ரகசியமாக காதலிப்பதாகவும், அதில் தனது மனைவிக்கு பிரச்சனை இல்லை என்றும் சிங்கப்பூர் நடிகர் ஆரன் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரை சேர்ந்தவர் நடிகர் ஆரன் அஜீஸ். சக்தி சவுந்தர் ராஜன் ஜெயம் ரவியை வைத்து இயக்கி வரும் டிக் டிக் டிக் படம் மூலம் இந்திய படத்தில் அறிமுகம் ஆகிறார் அஜீஸ். ரவியின் வில்லன் அஜீஸ் தான்.

படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

 டிக் டிக் டிக்

டிக் டிக் டிக்

டிக் டிக் டிக் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகவும் அன்பாக உள்ளனர். என்னை வெளிநாட்டுக்காரன் என்று பிரித்துப் பார்க்காமல் தங்களில் ஒருத்தனாக பார்க்கிறார்கள்.

 ஜெயம் ரவி

ஜெயம் ரவி

ஜெயம் ரவியை போய் பார்க்க தயார் ஆனேன். ஆனால் அவர் என்னை பார்க்க கேரவனுக்கு வந்தார். இதன் மூலம் ரவி தனது சக நடிகர்களிடம் காட்டும் மரியாதை தெரிகிறது.

 ரஜினி

ரஜினி

நான் ரஜினிகாந்த், பிரபுதேவா நடித்த தமிழ் படங்களை பார்த்துள்ளேன். மலேசியாவில் கபாலி ஷூட்டிங் நடந்தது தெரியும். ஆனால் அங்கு சூப்பர்ஸ்டாரை பார்க்க முடியவில்லை.

பாலிவுட்

பாலிவுட்

என் மனைவிக்கு பாலிவுட் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் நானும் பாலிவுட் படங்களை பார்ப்பேன். நான் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை ரகிசயமாக காதலிக்கிறேன். அதில் என் மனைவிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார் அஜீஸ்.

English summary
Singapore actor Aaron Aziz who is acting as Jayam Ravi's baddie in Tik Tik Tik says that he is secretly in love with actress Preity Zinta and his wife is OK with that.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil