பிரபல நடிகைகளை ஒட்டகங்களுடன் ஒப்பிட்ட அதிதி ராவ்.. ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?

கேன்ஸ்: முதல் முறையாக நடிகை அதிதி ராவ் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார்.

அதற்காக வித விதமான கவர்ச்சி உடைகளில் அவர் தன்னை அலங்கரித்துக் கொண்டு ரெட் கார்ப்பெட்டில் நடை போட்டு இருக்கிறார்.

அதன் புகைப்படங்கள் சர்வதேச அளவில் காட்டுத் தீ போல பரவி வரும் நிலையில், ஒட்டகங்களுக்கு நடுவே நான் நடக்கப் போறேன் என அவர் அளித்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அழகு அதிதி ராவ்

அழகு அதிதி ராவ்

பார்க்க பளிங்கு சிலை ஒன்று நடந்து வருவது போல அவ்வளவு அழகான அதிதி ராவ் இயக்குநர் மணிரத்னமின் காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். செக்கச் சிவந்த வானம், ஹே சினாமிகா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அசால்ட்டாக நடிப்பது அவரது ஸ்பெஷல்.

ஃபர்ஸ்ட் டைம் கேன்ஸ்

ஃபர்ஸ்ட் டைம் கேன்ஸ்

பூஜா ஹெக்டே, தமன்னாவை போல நடிகை அதிதி ராவும் முதன் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார். கவர்ச்சி சேலையில், வெள்ளிக்கிழமை ரெட் கார்ப்பெட்டில் நடந்த அதிதி ராவ், சனிக்கிழமை பிங்க் நிற கவர்ச்சி கவுனில் செம அழகாக நடைபோட்டு பலரது பார்வைகளை தன் பக்கம் திருப்பி உள்ளார்.

சின்ன பொண்ணு

சின்ன பொண்ணு

நான் ரொம்பவே சின்னப் பொண்ணு இப்படியொரு சர்வதேச திரைப்பட விழாவில் என்னை கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்ததற்கே ரொம்ப நன்றி. கேன்ஸ் திரைப்பட விழாவில் எப்படி கலந்து கொள்ள வேண்டும், எப்படி ரெட் கார்ப்பெட்டில் நடக்க வேண்டும் என்கிற எந்தவொரு ஐடியாவும் இல்லை. ஏதாவது தவறு செய்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள் என வெப் போர்ட்டல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

ஒட்டகங்களுக்கு நடுவே

ஒட்டகங்களுக்கு நடுவே

மேலும், இங்கே ஏகப்பட்ட ஒட்டகங்கள் இருக்கின்றன. அவங்களுக்கு நடுவே நான் ஒரு சின்ன பூச்சியாத்தான் தெரிவேன் என கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகைகளை ஒட்டகம் எனக் குறிப்பிட்டுள்ளார் அதிதி ராவ். ஆனால், உடனடியாக நான் தவறான அர்த்தத்தில் அப்படி சொல்லவில்லை இங்கே இருக்கும் பிரபலங்கள் எல்லாம் என்னை விட பல மடங்கு உயர்ந்தவர்கள், அதை குறிக்கவே அப்படி சொன்னேன் என அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார். ஹே சினாமிகா படத்தைத் தொடர்ந்து காந்தி டாக்ஸ் மற்றும் ஜுபிளி உள்ளிட்ட படங்களில் அதிதி ராவ் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X