»   »  கத்தி, லிங்கா சாதனையை முறியடிக்கத் தவறிய ஐ... கேரளாவில் மட்டும் சாதனை.. மற்ற இடங்களில் சறுக்கல்!

கத்தி, லிங்கா சாதனையை முறியடிக்கத் தவறிய ஐ... கேரளாவில் மட்டும் சாதனை.. மற்ற இடங்களில் சறுக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கத்தி, லிங்கா படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட விக்ரமின் ஐ தற்போது அதைச் செய்யத் தவறி விட்டது. அதேசமயம், கேரளாவில் மட்டும் அது முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது.

மற்றபடி தமிழகத்தில் இப்படம் ரிலீஸான ஜனவரி 14ம் தேதி முதல் நேற்று வரை நல்லபடியாக போய்க் கொண்டிருந்தது. வார நாட்கள் இன்று தொடங்குவதால் இதன் தலைவிதி அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐ, தமிழ், தெலுங்கு, இந்தியில் இதுவரை இந்தியாவில் 55.62 கோடி ரூபாய் என்ற அளவுக்கு வசூலித்துள்ளதாம். இது 3 நாட்கள் கணக்கு.


தமிழ், தெலுங்கு, இந்தியில்

தமிழ், தெலுங்கு, இந்தியில்

விக்ரம் நடித்து வெளியாகியுள்ள படம் ஐ. இப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் பொங்கல் விடுமுறையை வைத்து வசூலில் தொய்வில்லாத நிலையில் ஐ உள்ளது.


தமிழில் ரூ. 31 கோடி வசூல்

தமிழில் ரூ. 31 கோடி வசூல்

தமிழ் ஐ படம் ரூ. 31 கோடியை இதுவரை இந்தியாவில் வசூலித்துள்ளது. தெலுங்குப் படம் ரூ. 22 கோடியை வசூலித்துள்ளதாம். இந்தி வசூல் ரூ. 1.95 கோடியாம். 3 நாள் கணக்கு இது.


3 நாட்களில் ரூ. 55.62 கோடி வசூல்

3 நாட்களில் ரூ. 55.62 கோடி வசூல்

இந்தியாவில் முதல் மூன்று நாட்களில் இப்படம் அனைத்துப் பதிப்பிலும் சேர்த்து ரூ. 55.62 கோடி வசூலித்துள்ளது.


முறியடிக்கத் தவறியது

முறியடிக்கத் தவறியது

கத்தி, லிங்கா ஆகிய படங்கள் முதல் நாளில் ரூ 12 கோடிக்கு மேல் வசூலித்திருந்தன. அந்த சாதனையை முறியடிக்கத் தவறி விட்டதாம் ஐ. இப்படம் முதல் நாளில் ரூ. 8 கோடியை மட்டுமே வசூலித்ததாம்.


தெலுங்கில் டப்பிங் படத்தில் சாதனை

தெலுங்கில் டப்பிங் படத்தில் சாதனை

தெலுங்குப் பதிப்பு ஐ- யானது, ஆந்திரா, நிஜாம் பாக்ஸ் ஆபீஸில் டப்பிங் படத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.


கேரளாவில் சாதனை

கேரளாவில் சாதனை

கேரளாவில் முதல் நாளில் வசூல் சாதனையை ஐ செய்துள்ளதாம். வரலாறு காணாத வசூல் என்று சொல்கிறார்கள்.


இனிமேல்தான் தெரியும்

இனிமேல்தான் தெரியும்

பொங்கலும் முடிந்து விட்டது, விடுமுறைகளும் முடிந்து விட்டன. எனவே இன்று முதல் ஐ படத்திற்கு வரும் கூட்டத்தைப் பொறுத்தே அது போட்ட முதலை எடுக்கமா என்பது தெரிய வரும்.


English summary
Vikram-Shankar's magnum opus "I" ("Ai") continues to fare well at the Indian box office. The film has grossed over ₹55 crore in just three days in India, according to Box Office India.
Please Wait while comments are loading...