»   »  என் மனைவி படித்தவர்... நான் படிக்காதவன்: சகாப்தம் பட விழாவில் கேப்டனின் ‘மலரும் நினைவுகள்’!

என் மனைவி படித்தவர்... நான் படிக்காதவன்: சகாப்தம் பட விழாவில் கேப்டனின் ‘மலரும் நினைவுகள்’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 25 ஆண்டுகாலமாக தானும், தன் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்வதாக தெரிவித்துள்ளார் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்.

விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகம் ஆகும் படம் ‘சகாப்தம்'. இந்தப் படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கிறார். சுரேந்திரன் டைரக்டு செய்கிறார்.

‘சகாப்தம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. பாடல் சி.டி.யை குட்டி ஹெலிகாப்டரில் வைத்து ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயக்கி மேடையில் இருந்த விஜயகாந்த் கையில் கொண்டு கொடுப்பது போல் வித்தியாசமான முறையில் இந்த விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

இந்த விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:-

விட்டுக் கொடுத்து வாழ்கிறோம்...

விட்டுக் கொடுத்து வாழ்கிறோம்...

25-வது திருமண நாளைக் கொண்டாடும் எங்களது குடும்ப வாழ்க்கை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நானும் எனது மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்கிறோம். நிறைய விஷயங்களில் விட்டுக் கொடுக்கிறோம்.

படித்த மனைவி...

படித்த மனைவி...

என் மனைவி படித்தவர். நான் படிக்காதவன். இதைப் பற்றி என் மனைவி நினைத்ததே இல்லை. எல்லா விஷயங்களிலும் உதவியாக இருக்கிறார்.

நல்ல கருத்து...

நல்ல கருத்து...

என் மகன் சண்முகபாண்டியன் ‘சகாப்தம்' படத்தில் கதாநாயகனாகியுள்ளார். இந்த படத்தில் நல்ல கருத்து ஒன்றை சொல்லி இருக்கிறோம். படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்.

மகன் மீது நம்பிக்கை....

மகன் மீது நம்பிக்கை....

சண் முகப்பாண்டியன் நல்ல இடத்துக்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. டைரக்டர், ஒளிப்பதிவாளர், உள்ளிட்ட டெக்னீசியன்கள் திறமையானவர்கள்.

அதிக செலவு...

அதிக செலவு...

எங்கள் காலத்துக்கும் இப்போதைய காலத்துக்கும் தயாரிப்பு செலவுகள் வித்தியாசப்படுகிறது. முன் பெல்லாம் ரூ.1 லட்சம் செலவு என்று இருந்தது. இப்போது ரூ.1 கோடி ஆகி இருக்கிறது. ரூ.10 லட்சம் செலவு என்று இருந்தது. ரூ.10 கோடி, ரூ.20 கோடி, ரூ.30 கோடி என ஆகி உள்ளது.

நன்றி... நன்றி... நன்றி...

நன்றி... நன்றி... நன்றி...

இந்த விழாவில் பலர் பங்கேற்று சண்முக பாண்டியனை வாழ்த்தினர். எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் பேசினார்.

English summary
The DMDK president Vijayakanth while speaking at the audio release function of his son Shanmuga pandian's debut film Sagaptham has said that he and his wife lives a give and take life.
Please Wait while comments are loading...