»   »  விஜய் அரசியலுக்கு வர மாட்டார்னு நான் எப்ப சொன்னேன், ஆனால் அவர்...: எஸ்.ஏ.சி.

விஜய் அரசியலுக்கு வர மாட்டார்னு நான் எப்ப சொன்னேன், ஆனால் அவர்...: எஸ்.ஏ.சி.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று நான் கூறவே இல்லை என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இளைய தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். தங்களின் விருப்பத்தை அவர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று எஸ்.ஏ. சி. கூறியதை கேட்டு ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். விஜய்யை அரசியலுக்கு வரவிடாமல் எஸ்.ஏ.சி. தடுப்பதாகவும் கூறினர்.

இல்லை

இல்லை

விஜய் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் தனது மகன் அரசியலுக்கு வர மாட்டார் என தான் கூறவே இல்லை என தற்போது தெரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி.

அரசியல்

அரசியல்

விஜய்யை அரசியலில் ஈடுபடுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் தற்போது உள்ள அரசியல் சூழல் சரியில்லை. இது என் கருத்து என்கிறார் எஸ்.ஏ.சி.

விஜய்

விஜய்

என் கருத்திற்கும், விஜய்க்கும் தொடர்பு இல்லை. அரசியல் குறித்து அவர் என்ன திட்டங்கள் வைத்துள்ளார் என தெரியவில்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

English summary
Director cum actor S.A. Chandrasekhar said that he never told that his son Vijay won't enter politics.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil