Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
காதலுக்கு மரியாதை ஹீரோ முதலில் நான் தான்... எல்லாம் அவரின் சூழ்ச்சி... கலங்கிய அப்பாஸ்
ஆக்லாந்து: 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ்.
கதிர் இயக்கத்தில் வினீத், தபு ஆகியோருடன் நடித்திருந்த அப்பாஸ், முதல் படத்திலேயே சாக்லேட் ஹீரோவாக கொண்டாடப்பட்டார்.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்த அப்பாஸ், அதன் பின்னர் பீல்ட் அவுட் ஆகி சினிமாவில் இருந்தே விலகிவிட்டார்.
தற்போது நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் அப்பாஸ், காதலுக்கு மரியாதை படத்தின் ஹீரோ பிளாஷ்பேக் பற்றி அதிர்ச்சியான உண்மையை பேசியுள்ளார்.
அது காதல் இல்லை... நான் அந்தமாதிரி ரிலேஷன்ஷிப்ல தான் இருந்தேன்: அஞ்சலி சொன்ன ஷாக்கிங் நியூஸ்

அப்பாஸ் ஹேர் ஸ்டைல்
1996ம் ஆண்டில் கதிர் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான காதல் தேசம் திரைப்படம், இளைஞர்களால் கொண்டாடப்பட்டது. வினீத், தபு ஆகியோருடன் அப்பாஸும் ஹீரோவாக அறிமுகமானார். சாக்லேட் பாய், ஸ்டைலிஷான ஹேர் ஸ்டைல் என ஹேண்ட்ஸம் ஹீரோ மெட்டீரியலாக மாஸ் காட்டிய அப்பாஸுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக அப்பாஸ் ஹேர் ஸ்டைல், அப்பாஸ் கட்டிங் என்றே சலூன் கடைகளில் இளைஞர்களின் கூட்டம் அலை மோதியது.

காத்திருந்த இயக்குநர்கள்
அந்நேரம் பேண்டசியான படங்களுக்கான ஹீரோவாக பல இயக்குநர்கள் தேர்வில் அப்பாஸ் தான் முதலிடத்தில் இருந்தார். இதனால் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிந்தன. பிரபுதேவா, சிம்ரன், ரம்பா ஆகியோருடன் VIP, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பூவேலி என பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இதனால் கோலிவுட்டின் முன்னணி நடிகராக அப்பாஸ் வலம் வருவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரபலமான அதேவேகத்தில் மார்க்கெட் இல்லாமல் தடுமாறத் தொடங்கினார் அப்பாஸ்.

காதலுக்கு மரியாதை ஹீரோ
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் படையப்பா, கமலுடன் பம்மல் கே சம்பந்தம், சத்யராஜுடன் மலபார் போலீஸ், மம்முட்டி, அஜித்துடன் இணைந்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் என ஒருகட்டத்தில் செகண்ட் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய அப்பாஸ், மின்னலே படத்தில் மாதவனுக்கு எதிராக ஸ்மார்ட் வில்லனாகவும் நடித்தார். இந்நிலையில், காதலுக்கு மரியாதை படத்தில் நான் தான் ஹீரோவாக நடித்திருக்க வேண்டும் என இப்போது கண் கலங்கியுள்ளார் அப்பாஸ். தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் வசித்து வரும் அப்பாஸ், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

எல்லாம் அவரின் சூழ்ச்சி
அதில், காதலுக்கு மரியாதை படத்தில் என்னை தான் ஹீரோவாக நடிக்க வைக்க, இயக்குநர் பாசில் முடிவு செய்திருந்தார். அதுபற்றி அவர் தனது மேனேஜரிடம் பேசியதாகவும், ஆனால் கதையை கேட்ட அவர், சில பொய்யான காரணங்களைக் கூறி எனக்கு கால்ஷீட் இல்லை என சொல்லி அந்த வாய்ப்பை வீணடித்துவிட்டதாகவும் புலம்பியுள்ளார். அதனால் தான் காதலுக்கு மரியாதை ஹீரோ வாய்ப்பு விஜய்க்கு சென்றதாகவும் அப்பாஸ் கூறியுள்ளார். மேலும், காதலுக்கு மரியாதை படத்தில் நடித்திருந்தால், இன்று நானும் விஜய் மாதிரி பெரிய ஹீரோவாக இருந்திருப்பேன் எனவும் பேசியுள்ளார். இந்தத் தகவலை பல நாட்களுக்குப் பிறகு தான் அவரது மேனேஜர் அப்பாஸிடம் தெரிவித்தாராம், இதுதான் அப்பாஸின் மேனேஜர் அவருக்கு செய்த சூழ்ச்சியாக அமைந்துள்ளது.

ஜீன்ஸ் ஹீரோ அப்பாஸ்
அதேபோல், ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த 'ஜீன்ஸ்' திரைப்படம் 1998ம் ஆண்டு வெளியானது. பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க அப்பாஸுக்கு தான் முதலில் சான்ஸ் கிடைத்ததாம். ஆனால், அவர் தான் இந்த வாய்ப்பையும் தவறவிட்டதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.