twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பருத்திவீரன் படத்தை நான் எடுத்து இருக்கவே கூடாது.. வருத்தத்தில் புலம்பும் இயக்குனர் அமீர்!

    |

    சென்னை: மௌனம் பேசியதே மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அமீர்

    கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படம் தேசிய விருதை வென்று இந்திய அளவில் கவனிக்கக்கூடிய முக்கிய இயக்குனராக தற்போது மாறியுள்ளார்

    இயக்குனராக இருந்து இப்பொழுது நடிகராக பரிமாணம் எடுத்து கலக்கி கொண்டிருக்கும் அமீர் பருத்திவீரன் படத்தை நான் எடுத்து இருக்கவே கூடாது என மிகுந்த வருத்தத்தில் உள்ளார்.

    வெற்றிமாறன் திரைக்கதை.. அமீர் இயக்கத்தில்.. மதப் பிரச்சனையை கையில் எடுத்துள்ள இறைவன் மிகப் பெரியவன்!வெற்றிமாறன் திரைக்கதை.. அமீர் இயக்கத்தில்.. மதப் பிரச்சனையை கையில் எடுத்துள்ள இறைவன் மிகப் பெரியவன்!

    ட்ரெண்ட் செட்டராக

    ட்ரெண்ட் செட்டராக

    சூர்யாவின் மிக வித்தியாசமான நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். முதல் படத்திலேயே மென்மையான காதலையும் காதல் தோல்வியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் மிக சிறப்பாக அமீர் சொன்ன விதம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. மேலும் மௌனம் பேசியதே திரைப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளியான ராம் திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக பெயர் பெற்றார்

    பருத்திவீரன்

    பருத்திவீரன்

    இந்த நிலையில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கிய இந்திய அளவில் மிகப் பெரிய கவனத்தை பெற்றதோடு அப்படம் தேசிய விருதுகளையும் வென்றது. மதுரை மண்ணின் மண்வாசனை மாறாமல் ராவாக எடுக்கப்பட்ட பருத்திவீரன் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்தியின் திரை வாழ்க்கையில் இந்த படம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்தப் படத்தில் பிரியா மணி முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகையாக தேசிய விருதையும் வென்றார். பருத்திவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பெரும் சர்ச்சையாகி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

     நான் எடுத்து இருக்கவே கூடாது

    நான் எடுத்து இருக்கவே கூடாது

    பிறகு ஆதிபகவான் என்ற படத்தை இயக்கிய அமீர் இப்பொழுது நடிகராக வலம் வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னையில் ராஜன் கதாபாத்திரத்தில் வடசென்னை தாதாவாக நடித்து மிரட்டிய அமீர், நாற்காலியில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். மேலும் சந்தனத்தேவன், இறைவன் மிகப் பெரியவன் உள்ளிட்ட படங்களை தற்போது இயக்கி வருகிறார். இந்த நிலையில் பருத்திவீரன் படத்தை நான் எடுத்து இருக்கவே கூடாது என வருத்தப்பட்டு பேசியுள்ளார்.

    எந்த சந்தோசத்தையும் கொடுக்கவில்லை

    எந்த சந்தோசத்தையும் கொடுக்கவில்லை

    அதில் அவர் பேசியுள்ளதாவது பருத்திவீரன் படத்திற்கு பின் மிகப்பெரிய வலி உள்ளது. பருத்திவீரன் படத்தை நான் எடுத்து இருக்கவே கூடாது. பருத்திவீரன் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்தது அங்கீகாரத்தையும் கொடுத்தது என்று வைத்துக்கொண்டாலும் கூட ஒரு மனிதனாக எனக்கு எந்த சந்தோசத்தையும் கொடுக்கவில்லை.

    வலிகளையும் கசப்பான அனுபவத்தையும்

    வலிகளையும் கசப்பான அனுபவத்தையும்

    அந்த படம் இந்த நிமிடம் வரை பல வலிகளை தான் கொடுத்துள்ளது. அப்படி இருக்கும்போது வலிகளை கொடுத்தவர்களைப் பற்றி கூற வேண்டியது உள்ளது. வலிகளை கொடுத்தது அதற்குப் பின்புலமாக இருந்தது யார் அதற்கு இன்னும் தூண்டுகோலாக இருந்தது யார் என அனைவரையும் சபைக்கு கூட்டிக்கொண்டு வர வேண்டியதாகிவிடும். என பருத்தி வீரன் படத்திற்கு பின்னால் உள்ள வலிகளையும் கசப்பான அனுபவத்தையும் நேர்காணல் ஒன்றில் அமீர் பகிர்ந்துள்ளார்.

    English summary
    I shouldn’t direct paruthiveeran movie says director amir
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X