»   »  லிங்குசாமியிடம் இருந்து நான் ஒன்னுமே கத்துக்கவில்லையா?: ராஜுமுருகன்

லிங்குசாமியிடம் இருந்து நான் ஒன்னுமே கத்துக்கவில்லையா?: ராஜுமுருகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் லிங்குசாமியிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என ஜோக்கர் பட இயக்குனர் ராஜுமுருகன் தெரிவித்துள்ளார்.

ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜுமுருகன் இயக்குனர் லிங்குசாமியிடம் உதவியாளராக இருந்தவர். இந்நிலையில் படத்தை பார்த்த லிங்குசாமியால் தனது சிஷ்யனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


ராஜுமுருகன் என்னிடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை அவரிடம் இருந்து நான் தான் கற்றுள்ளேன் என்றார் லிங்குசாமி. இந்நிலையில் இது குறித்து ராஜு கூறுகையில்,


லிங்குசாமி

லிங்குசாமி

லிங்குசாமி அவ்வாறு கூறியுள்ளது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. உண்மையில் நான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.


ரீமேக்

ரீமேக்

ஜோக்கர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறேன். தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு படம் பண்ணுமாறு பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் என்னிடம் கேட்கின்றன.


மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ஜோக்கர் படத்தை பார்ப்பவர்கள் எல்லாம் புகழ்கிறார்கள். ஆனால் நான் பார்த்து வியக்கும் நபர்கள் என்னை பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லக்கண்ணு படத்தை பார்த்து பாராட்டியதுடன் பரிசு அளித்தது பெருமையாக உள்ளது என்றார் ராஜு.


ரஜினி

ரஜினி

ஜோக்கர் படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ராஜுமுருகனை பாராட்டியுள்ளனர். விரைவில் ராஜுவை சந்திப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.


English summary
Joker director Raju Murugan said that he has learnt a lot from his guru Lingusamy.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil