மாஸ்டர் நடிகர் போல் மாப்பிள்ளை கேட்கும் டிவி சீரியல் நடிகை
சென்னை : விஜே.,வாக இருந்து நடிகையானவர் நடிகை பார்வதி. இவர் தற்போது நடிகை தேவயாணி நடிக்கும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் தேவயாணியுடனான தனது நடிப்பு அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
அத்துடன் தனக்கு எப்படிப்பட்டவர் கணவராக வர வேண்டும், யாரை போல் தனது மாப்பிள்ளை இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் ஓப்பனாக பேசி உள்ளார் பார்வதி.

முதல் சீரியல் அனுபவம்
தனது முதல் சீரியல் அனுபவம் பற்றி கூறிய பார்வதி, பெரிய சேனல் ஒன்றில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய விஷயம். ஆரம்பத்தில் ரொம்ப பயந்தேன். அதே சமயம் தேவயாணி மற்றும் லியோனியுடன் நடிப்பது த்ரில்லிங்காக இருந்தது.

தேவயாணியின் செல்ல பெயர்
தேவயாணியை தேவ் என்று தான் நான் கூப்பிடுவேன். லியோனி சார், பழக ரொம்ப எளிமையான மனிதர். எனக்கு ரொம்ப நம்பிக்கை கொடுத்தனர். நடிப்பு பற்றிய நிறைய விஷயங்களை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது.

வீட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்
அந்த டீம்முடன் பணியாற்றியது எனக்கு வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. நடிக்கும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தேன். அவர்களின் பாசிடிவிட்டி எனக்கு நடிப்பில் நிறைய அனுபவங்களை கற்றுக் கொடுத்தது.

நான் சிங்கிள் தான்
சமீபத்தில் பார்வதியிடம் நடிகர் அர்ஜுன் தாஸ் காதலை சொல்வது போன்ற வீடியோ ஒன்று வைரலானது. இது பற்றி கேட்டதற்கு, கைதி ஸ்டெயிலில் அவர் என்னிடம் ப்ரபோஸ் செய்தார். ஆனால் தற்போது வரை நான் சிங்கிள் தான்.

அர்ஜுன் தாஸ் போல் பாய் ஃபிரண்ட்
ஆனால் அர்ஜுன் தாஸ் போல் ஒரு பாய் ஃபிரண்ட் வேணும், அவரை காதலிக்கனும்னு ஆசை. நேர்மையாக, என் மீது அக்கறையாக இருக்கும் ஒருவர் தான் எனக்கு கணவராக வர வேண்டும் என்று ஆசை என்றார் பார்வதி.

அடுத்தடுத்த சீரியல் வாய்ப்பு
தற்போது மற்றொரு சீரியல் ஒன்றில் ரியாஸ் கானுடன் நடிக்க பார்வதி ஒப்பந்தம் ஆகி உள்ளார். அடுத்தடுத்து பல சீரியல்களில் ஹீரோயினாக நடிக்க பார்வதிக்கு வாய்ப்பு வந்து கொண்டிருப்பதால் விரைவில் பெரிய திரைக்கும் வருவார் என பலர் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











