twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் & சித்தார்த்தை வைத்து நான் படம் எடுப்பதாக இருந்தது... இயக்குநர் லிங்குசாமி பேட்டி

    |

    சென்னை: இயக்குநர் லிங்குசாமி கடைசியாக தி வாரியர் என்கிற தெலுங்கு படத்தை இயக்கியிருந்தார்.

    அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் சேதுபதி மற்றும் விஷ்னு விஷாலை வைத்து தயாரித்திருந்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் தற்சமயம் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் கமல் ஹாசனை வைத்து படம் இயக்குவது பற்றியும் உத்தம வில்லன் அனுபவம் பற்றியும் லிங்குசாமி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

    “கமல் மீது பழிபோட வேண்டாம்... சீக்கிரமே அவருடன் இணைகிறேன்”: லிங்குசாமி சீக்ரெட் ட்விஸ்ட்“கமல் மீது பழிபோட வேண்டாம்... சீக்கிரமே அவருடன் இணைகிறேன்”: லிங்குசாமி சீக்ரெட் ட்விஸ்ட்

    முன்னாடியும் சுடும் பின்னாடியும் சுடும்

    முன்னாடியும் சுடும் பின்னாடியும் சுடும்

    லிங்குசாமி தனது முதல் படமான ஆனந்தம் திரைப்படத்தை முடித்த பின்னர் இரண்டாவது படத்தை முற்றிலும் வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தாராம். அபூர்வ சகோதரர்கள் படத்தில் தனக்கு பிடித்த வசனம் இந்த துப்பாக்கி முன்னாடியும் சுடும் பின்னாடியும் சுடும். அந்த வசனம் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் அதனால் ஆனந்தம் போல் இல்லாமல் மேக்கிங்கிலும் சரி கதையாகவும் சரி எந்த வகையிலும் தன்னுடைய இரண்டாவது படம் இருக்கக்கூடாது என்று தீர்க்கமாக முடிவு செய்து எடுத்த படம்தான் ரன் என கூறியுள்ளார்.

    தேவர் மகன்

    தேவர் மகன்

    உத்தம வில்லன் படத்தின் தோல்விதான் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சறுக்கலுக்கு காரணம் என பலரும் கூறுகிறார்கள். ஆனால் இதுவரை என்னுடைய வாயிலிருந்து அப்படிப்பட்ட வார்த்தைகள் வந்ததில்லை. கமல் சாருடன் பணி புரிந்ததே நான் மிகப் பெரிய விசயமாக கருதுகிறேன். அவருடைய பல படங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். சண்டக்கோழி திரைப்படம் கூட தேவர் மகன் படத்தின் இன்ஸ்பிரேஷனில் உருவான கதைதான். அவரிடம் நான் நிறைய கற்றுள்ளேன். அதனால் என்றுமே அவரைப் பற்றி தவறாக நான் கூற மாட்டேன் என்று லிங்குசாமி கூறியிருக்கிறார்.

    கமல் சித்தார்த்

    கமல் சித்தார்த்

    நான் எப்படி நடிகர் ரஜினியின் தீவிர ரசிகனோ அதே போல எனது சகோதரர் போஸ் கமல் சாரின் தீவிர ரசிகன். முதலில் பாபநாசம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கலாம் என்று போஸ் கூறினார். இன்னொரு பக்கம் இப்போது வந்த விக்ரம் திரைப்படத்தை போன்ற ஒரு கதையை கமல் சார் கூறினார். அதில் நடிகர் சித்தார்த்தும் சேர்ந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் இறுதியாக உத்தம வில்லனை தேர்ந்தெடுத்தோம்.

    கமல் லிங்குசாமி

    கமல் லிங்குசாமி

    எப்போதும் கமல் சாரின் திரைப்படங்களை தாமதமாக பாராட்டுவார்கள். அந்த வகையில் இப்போது கூட உத்தம வில்லனை நிறைய நபர்கள் பாராட்டுகிறார்கள். இயக்குநர் கௌதம், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட பாராட்டினார்கள். மேலும், கமல் சாருக்காக நான் முன்னதாக எழுதிய மதி என்கிற கதையை அவ்வப்போது புதுப்பித்து வருகிறேன். சமீபத்தில் கமல் சாரை நேரில் சந்தித்தேன். கூடிய விரைவில் இருவரும் இணைந்து படம் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று லிங்குசாமி கூறியிருக்கிறார்.

    English summary
    Director Lingusamy had last directed a Telugu film called The Warrior. He has announced the release of his upcoming film Yeval, which he produced a few years ago with Vijay Sethupathi and Vishnu Vishal. In this case, Lingusamy has said in an interview about directing a film with Kamal Haasan and the experience of a Uthama Villan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X