அஜித் சார் சொன்னது மறக்கவே முடியாது... விக்னேஷ் சிவன் பகிர்ந்து முக்கிய தகவல்!

சென்னை: காதல் படங்களை ட்ரெண்டிங் கலந்து புதிய பரிமாணத்தில் படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்

நானும் ரவுடிதான் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது

இந்த நிலையில் என்னை அறிந்தால் படத்தில் பணியாற்றியபோது அஜித் சொன்னது மறக்கவே முடியாது என தனியா யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

சாஃப்டான ரவுடி

சாஃப்டான ரவுடி

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி பெற்று வருகிறது போடா போடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவனுக்கு முதல் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் அதைத் தொடர்ந்து வெளியான நானும் ரவுடி தான் இவரை உடனடியாக டாப்புக்கு கொண்டு சென்றது. அதுவரை முரட்டுத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் படத்தில் சாஃப்டான ரவுடி கதாபாத்திரத்தில் நடித்தது அனைவரையும் கவர்ந்து. மேலும் நடிகை நயன்தாரா காது கேட்காத பெண்மணியாக க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

முக்கோண காதல் கதையை

முக்கோண காதல் கதையை

விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணி முதல் முறையாக இணைந்து நானும் ரவுடிதான் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த கூட்டணியை இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் . ட்ரெண்டிங் கலந்து புதிய பரிமாணத்தில் காதல் படங்களை மிகவும் வித்தியாசமாக எடுக்கக்கூடிய விக்னேஷ் சிவன் இந்த படத்தில் முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு எடுத்துள்ளார்.

அடுத்ததாக அஜித் படம்

அடுத்ததாக அஜித் படம்

ஒரு காதலனுக்கு இரண்டு காதலிகள் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் கலகலப்பான காதல் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு நாயகிகள் இதில் கலக்கி இருக்க விஜய் சேதுபதி வழக்கம் போல நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அடுத்ததாக அஜித் நடிக்கும் படத்தை இயக்க உள்ள விக்னேஷ் சிவன் என்னை அறிந்தால் படத்தில் பணியாற்றிய போது நடந்த சுவாரசிய தகவலை தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

தல அஜித் கூட படம் பண்ணனும் | தமிழ் Youngest Director| Sona Sokkama- First Single
மறக்க முடியாத நிகழ்வாகும்

மறக்க முடியாத நிகழ்வாகும்

கௌதம் மேனன் சாரிடம் உதவி இயக்குனராக ஜாயின் பண்ண ட்ரை பண்ணேன் ஆனா அது கிடைக்கவில்லை. ஒரு நாள் என்னை அறிந்தால் பட படப்பிடிப்பிற்கு கௌதம் சார் என்ன வர சொன்னார் அதாரு அதாரு பாடலை என்னை எழுதச் சொன்னார். அங்கிருந்த அஜித் சாரை சந்தித்தேன். அப்போது அவர் நாளைக்கு பாட்டோட வந்து நான் வெயிட் பண்றேன் என ஃபாரின் இங்கிலீஷில் என்னுடன் பேசியது எனக்கு பிரமிப்பாகவும் அதேசமயம் மறக்க முடியாத நிகழ்வாகும் உள்ளது என இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X