twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையை விட்டு போக மாட்டேன்... பொன்னியின் செல்வன் நம்பி ஜெயராம்

    |

    சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பை பார்த்துள்ளது.

    உலக அளவில் முதல் நாள் மட்டும் இந்தத் திரைப்படம் 80 கோடிகள் வசூலித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் நடிகர் ஜெயராம் பொன்னியின் செல்வன் பற்றியும் சென்னை பற்றியும் கூறியுள்ள சுவாரசியமான விஷயங்களை இந்தக் கட்டுரையில் காண்போம்.

    ”இந்தி தெரியாது போடான்னு ஆரம்பிச்சது மணிரத்னம் தான்”: கமல் சொன்னது இப்போ உண்மை ஆகிடுச்சே!”இந்தி தெரியாது போடான்னு ஆரம்பிச்சது மணிரத்னம் தான்”: கமல் சொன்னது இப்போ உண்மை ஆகிடுச்சே!

    ஆழ்வார்க்கடியான் நம்பி

    ஆழ்வார்க்கடியான் நம்பி

    ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அவரும் வந்தியத்தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தியும் வரும் காட்சிகள் நகைச்சுவையுடன் ரசிக்கும்படியாக இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது கூட மற்ற நடிகர்களை விட ஜெயராமின் பேச்சு அதிகம் பேரை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆடிஷன்

    ஆடிஷன்

    ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் வைக்கும் அளவிற்கு ஃபிட்டாக இருந்தாராம் ஜெயராம். அப்போதுதான் ஒரு நாள் இயக்குநர் மணிரத்தினம் தன்னை அழைத்து பொன்னியின் செல்வன் வாய்ப்பை பற்றி கூறினாராம். முதலில் அவர் கூறியது தொப்பை போட வேண்டும் என்பதுதான். இவ்வளவு சிரமப்பட்டு உடல் எடையை குறைத்துள்ளோம், இப்போது தொப்பை போட வேண்டுமா என்று முதலில் யோசித்தாலும் பொன்னியின் செல்வன் என்கிற மிகப்பெரிய வாய்ப்பை தவற விட அவருக்கு மனம் வரவில்லை. எனவே உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம். ஆனால் இன்னொரு பிரச்சனை இருந்திருக்கிறது.

    ஆறடி உயரம்

    ஆறடி உயரம்

    கல்கி அவர்கள் அந்த கதாபாத்திரத்தை எழுதியபோதே நம்பி குட்டையாக இருப்பான் என்று தான் எழுதியிருந்தாராம். ஆனால் ஜெயராம் கிட்டத்தட்ட ஆறு அடி உயரம். என்ன செய்யப் போகிறோம் என்று பேசும்போது, ஜெயராம் நான் இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல ஒரு முறை நடந்து காட்டவா என்று கூறி படத்தில் வரும் அந்த உடல் மொழியுடன் நடந்து காட்டியுள்ளார். இது அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று மணிரத்தினம் உடனே சம்மதித்து விட்டாராம். படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து கடைசி நாள் வரை தன்னுடைய நடிப்பில் மணிரத்னம் எந்தவிதமான திருத்தங்களையும் சொல்லவில்லையாம். அது எனக்கு பெருமை என்று ஜெயராம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

    சென்னை

    சென்னை

    தென்னிந்தியாவில் உள்ள நான்கு மொழி சினிமா துறைகளுக்கும் சென்னைதான் ஒரு காலகட்டத்தில் தலைநகரமாக இருந்தது. அதனால் கன்னட, தெலுங்கு, மலையாள நடிகர்கள் அனைவருமே இங்குதான் தங்கியிருந்தார்கள். பின்னர் அவரவர் மொழிகளில் அவரவர்களுக்கென இடத்தை உருவாக்கிக் கொண்டு தங்களுடைய மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். அப்படி சென்னையில் இருந்த நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் கூட இப்போது கேரளாவிற்கு சென்றுவிட்டனர். ஆனால் நடிகர் ஜெயராம் மட்டும் இன்னும் சென்னையில்தான் இருக்கிறார். அதற்கு ஏன் என்று காரணம் கேட்டபோது, என்னுடைய பிள்ளைகள்தான் காரணம். அவர்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். வெளிநாட்டில் சென்று குடியமர்த்துகிறேன் என்று சொன்னால் கூட அவர்கள் சென்னையை விட்டு வர மாட்டார்கள். சென்னையில் பிறந்து வளர்ந்து செட்டில் ஆன ஒருவரால் வேறு இடத்திற்கு அவ்வளவு எளிதாக சென்று விட முடியாது என்று கூறியுள்ளார். ஜெயராமின் அம்மா கும்பகோணத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.

    English summary
    Fans Have given Super Response to Ponniyin Selvan Part-1 Movie. On First Day itself the box office collection report is 80 crores. Actor Jeyaram Who is Playing Aalvaarkadiyaan Role in this movie shared some interesting information about ponniyin selvan and Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X