For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என் அரசியல் வளர்ச்சிக்கு அப்பாவின் புகழை பயன்படுத்த மாட்டேன்-திவ்யா சத்யராஜ்

  |

  சென்னை: அரசியல்வாதிகள் எண்ணம் எல்லாம் பேனர் கட்டுவதிலும், போஸ்டர் ஓட்டுவதிலும் தான் இருக்கிறது. மக்கள் சேவையைப் பற்றி புரிந்து கொள்வதில்லை. நாம் ஒரு அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் அந்த அமைப்பில் இருந்தால் தான் அதை செயல்படுத்த முடியும். மக்களின் தேவைகளை புரிந்து கொள்வதற்கான வேலையில் ஈடுபட்டு இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆகவே நான் அரசியலுக்கு வருவதன் மூலம் இந்த சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறேன் என்றார் திவ்யா சத்யராஜ்.

  கோயம்புத்தூர் குசும்புக்கு பெயர் போனவர் நடிகர் சத்யராஜ். ஒரு வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிறகு கதாநாயகன் ஆனவர். இவரின் மகன் சிபி சத்யராஜும் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி கதாநாயகனாக உள்ளார். சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டச்சத்து நிபுணர். உலகின் மிகப்பெரிய மதிய உணவு திட்டங்களில் ஒன்றான அக்ஷயா பத்ராவின் தூதராகவும் உள்ளார்.

  I will not use Dads reputation for my political development-Divya Sathyaraj

  தந்தையும், சகோதரனும் சினிமாத்துறையில் தனக்கென ஒரு தனி ஸ்டைலை வைத்து கொண்டு கலக்கி வருபவர்கள். ஆனால் அந்த கலைக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் ஒரு வித்தியாசமான பெண்ணாக, சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணங்களோடு பல நல்ல விஷயங்களுக்காக பாடு பட்டு வருகிறார் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அவர் மேலும் பல நலத்திட்டங்களை மக்களுக்கு அளிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

  வேர்ல்ட் விஷன் அமைப்புடன் இணைந்து கிராமப்புற பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஊட்டசத்து மிகுந்த உணவுகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் மருத்துவத் துறையில் நடைபெறும் முறைகேடுகளைப் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமருக்கு கடிதம் எழுதியது சமீபத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.

  I will not use Dads reputation for my political development-Divya Sathyaraj

  மேலும் திவ்யா சத்யராஜ் கூறுகையில், குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைத்து மருத்துவர்களுக்கும் இருக்க வேண்டும். எண்ணத்தோடு இல்லாமல் அதை நோக்கி செயல்படவும் வேண்டும். நான் ஒரு ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதனால் தமிழ்நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வகையில் நானே எனது முயற்சியால் பல வாய்ப்புகளை அமைக்க முடிவு செய்துள்ளேன். அதன் அடிப்படையாக அரசு மருத்துவமனையில் என் ஆராய்ச்சியை தொடங்கியுள்ளேன்.

  அரசு மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடுள்ளது. ஐந்தில் இரண்டு பெண்களுக்கு இந்த குறைபாடு உள்ளது. இதனால் ரத்த சோகை உண்டாகிறது. ஆபரேஷன் தியேட்டர் மற்றும் தாழ்வாரங்கள் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை. நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், தொற்றுநோய்களால் எளிதில் பாதிக்கப்படுவர். அவற்றை சுத்தமாக வைத்து கொண்டால் தான் நோய்கள் பரவாமல் இருக்கும். அங்கு போதுமான அளவு தலையணை மற்றும் போர்வைகள் இல்லை. மழைக்காலங்களில் மக்கள் அதிக அளவில் நோய்களால் பாதிக்கப்படுவர்.

  I will not use Dads reputation for my political development-Divya Sathyaraj

  அந்த சமயத்தில் நோய்களை தடுக்க தரமான ஊசிகள் நிறைய கையிருப்பில் இருப்பது அவசியம் என அரசு மருத்துவமனையை மேம்படுத்துதலின் அவசியத்தை பற்றி கூறினார் திவ்யா. மருந்து கடைகளில் காலாவதியான மருந்துகள் உடனடியாக அகற்றப்படவேண்டும். இல்லையெனில், அது பல உடல் உபாதைகளை உண்டாக்கும். மக்களும் பால் பவுடர், ஷாம்பு, மருந்துகள் என எதை வாங்கினாலும், அதன் காலாவதி தேதியை சரிபார்த்த பிறகே வாங்க வேண்டும். மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தான் மருந்துகள் வாங்குகிறார்கள். அதனால் காலாவதியான மாத்திரைகளை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் என மருந்து கடை உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் திவ்யா.

  ஒரு மனிதனுக்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் உள்ளன. ஒன்று உடல் ஆரோக்கியம், மற்றோன்று பணம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் கடுமையாக உழைக்க முடியும். கடினமாக உழைத்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும். ஆரோக்கியமான வாழ்வு வசதியானவர்களுக்கு மட்டும் தான் என்பதில் எந்த நியாயமும் இல்லை. தனியார் மருத்துவமனைகள் வருவாய் ஈட்டும் இயந்திரங்களாக மட்டுமே இருக்கின்றன. அங்கு சென்றால் நோய் குணமாகும் என்ற ஒரு நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது. இல்லையெனில் மருத்துவமனைக்கு செல்ல பயப்படுகிறார்கள்.

  ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளில் 39.4 % குழந்தைகளுக்கு போதுமான வளர்ச்சி இல்லை. 12 மாதங்களில் இருந்து 23 மாதங்களுக்குள் உள்ள குழந்தைகளுக்கு 62 % ஊசிகள் மட்டுமே போடப்படுகிறது. இந்த குறைபாடுகளை போக்குவதற்காக வேர்ல்ட் விஷன் நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி நடத்தி வருகிறேன் என்றார் திவ்யா.

  ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதால் எனது முழு கவனமும் சுகாதாரத்துறை மீது தான் இருக்கிறது. தமிழ் நாட்டில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கும், குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களுக்கும் வைட்டமின் தெரபி பற்றி நிகழ்ச்சி நடத்தியுள்ளேன். ஆனால் இன்று தண்ணீர் பிரச்சனை தொடங்கி பல பிரச்சனைகள் நம்மை சுற்றி நடக்கின்றன.

  அரசியல்வாதிகள் எண்ணம் எல்லாம் பேனர் கட்டுவதிலும், போஸ்டர் ஓட்டுவதிலும் தான் இருக்கிறது. மக்கள் சேவையைப் பற்றி புரிந்து கொள்வதில்லை. நாம் ஒரு அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால் அந்த அமைப்பில் இருந்தால் தான் அதை செயல்படுத்த முடியும். மக்களின் தேவைகளை புரிந்து கொள்வதற்கான வேலையில் ஈடுபட்டு இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆகவே நான் அரசியலுக்கு வருவதன் மூலம் இந்த சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறேன் என்றார் திவ்யா சத்யராஜ்.

  எனது தந்தை சத்யராஜ் மற்றும் தாயார் இருவரும் எனக்கு எப்போதுமே ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால் நான் சுயமாக சிந்திக்க கூடிய ஒரு பெண்.

  என் பணியை ஆரம்பித்த போது அப்பாவின் பெயரையோ, அந்தஸ்தையோ தனது வளர்ச்சிக்காக பயன்படுத்தியதில்லை. அவரை அரசியல் வளர்ச்சிக்கும் பயன்படுத்த மாட்டேன் என்றும் கூறியுள்ளார் திவ்யா சத்யராஜ்.

  ஊட்டச்சத்து நிபுணருக்கான படிப்பை மேற்கொண்டு சமூக அக்கறையோடு இன்று பல நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கும் திவ்யா சத்யராஜின் எண்ணங்கள் நோக்கங்கள் எல்லாம் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பது பாராட்டுக்குரியது. அவரின் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்.

  English summary
  All politicians think is in banner and poster. People don’t understand about service. If we want to update a system, we can implement it only if it is in that system. It has been two years of working to understand the needs of the people. So I hope that I can make these social programs better by coming to politics, ”said Divya Satyaraj.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X