»   »  விஜய் நான் உங்களை பாராட்ட மாட்டேன், ஏனெனில்...: சேரன்

விஜய் நான் உங்களை பாராட்ட மாட்டேன், ஏனெனில்...: சேரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனிதாவின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதற்கு விஜய்யை பாராட்ட மாட்டேன் என்று இயக்குனரும், நடிகருமான சேரன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் டாக்டருக்கு படிக்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூரை சேர்ந்த அனிதா.

தளபதி விஜய் நேற்று அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்தார்.

சேரன்

@actorvijay அனிதாவின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் சொன்னது மனதில் பதிகிறது.. பாராட்ட மாட்டேன் ஏனெனில் இது உங்கள் கடமை. தொடருங்கள் என்று இயக்குனரும், நடிகருமான சேரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வைரல்

வைரல்

விஜய் அனிதா வீட்டு தரையில் அமர்ந்து அவரின் தந்தையின் தோளின்மீது கைபோட்டு ஆறுதல் கூறிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

ரஞ்சித்

ப.ரஞ்சித்துக்கு நல்லா அட்வஸ் பண்ணுங்க பாஸ் என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவிக்க சேரனோ, சின்னப்பையன் தான பாஸ்.. ரெண்டு படம்தான பண்ணிருக்காரு. அவரா உணர்வார் என்று பதில் அளித்துள்ளார்.

விஜய்

உங்கட்ட இருந்து இது வந்ததே பெரிய விஷயமா பார்க்கிறோம் என்று விஜய் ரசிகர் ஒருவர் ட்வீட்டினார். இதை பார்த்த சேரன், ஏங்க எனக்கு அவர் படங்களும் பிடிக்கும் கத்தில விவசாயம் சார்ந்த மண்ணின் மகனா பண்ணிருந்தத அவர்கிட்டே பாராட்டிருக்கேன் என்று பதில் அளித்துள்ளார்.

English summary
Director cum actor Cheran tweeted that he won't appreciate Vijay for visiting Anitha's parents as it is his duty to do so.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil