twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தவறாக சித்தரிப்பதா? ஜான்வி கபூர் படத்துக்கு விமானப்படை எதிர்ப்பு.. காட்சிகளை நீக்க வேண்டும்!

    By
    |

    சென்னை: ஜான்வி கபூர் நடித்துள்ள குஞ்சன் சக்ஸேனா படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் என்று இந்திய விமானப்படை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சரண் சர்மா இயக்கத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ள படம், குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்.

    கரண் ஜோஹர் தனது தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் இது. ஜீ ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளது.

    கோலிவுட் நடிகையையும் விடாத கொரோனா வைரஸ்.. பரபரப்பு போஸ்ட். இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?கோலிவுட் நடிகையையும் விடாத கொரோனா வைரஸ்.. பரபரப்பு போஸ்ட். இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

    குஞ்சன் சக்ஸேனா

    குஞ்சன் சக்ஸேனா

    இந்தப் படத்தில் பங்கஜ் திரிபாதி, அங்கத் பேடி, வினித்குமார் சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் இது. கார்க்கில் போரின் போது வீரர்களை காப்பாற்ற விமானப்படை ஹெலிகாப்டர்களை இயக்கிய விமானி இவர். இதற்காக விருதும் பெற்றிருந்தார்.

    கொரோனா காரணமாக

    கொரோனா காரணமாக

    குஞ்சன் சக்ஸேனா கேரக்டரில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். ஏப்ரல் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த படம், கொரோனா காரணமாக தள்ளிப் போனது. இந்நிலையில் பல தயாரிப்பாளர்கள் ஒடிடி தளங்களில் தங்கள் படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேற்று ரிலீஸ் ஆனது.

    மாற்ற வேண்டும்

    மாற்ற வேண்டும்

    இந்தப் படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களையும் மாற்ற வேண்டும் என்று இந்திய விமானப்படை கடிதம் அனுப்பியுள்ளது. படத்தில் வரும் சில காட்சிகள் விமானப்படைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவது போல இருப்பதாகக் கூறி, மத்திய தணிக்கை குழுவுக்கும் படத்தைத் தயாரித்த தர்மா புரொடக்‌ஷன்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனங்களுக்கும் இந்திய விமானப் படை கடிதம் அனுப்பியுள்ளது.

    பெண்கள் குறித்து

    பெண்கள் குறித்து

    அதில், பட ரிலீஸுக்கு முன்பு ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் மற்றும் காட்சிகள் இருந்தால் அதை நீக்க வேண்டும் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தை விமானப்படை கோரியிருந்தது. இருந்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமானப்படை தெரிவித்துள்ளது. சில காட்சிகளில், விமானப்படையில் உள்ள பெண்கள் குறித்து தவறான பிம்பத்தை ஏற்படுத்துவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    பெண் அதிகாரிகள்

    பெண் அதிகாரிகள்

    விமானப் படை எப்போதும் பாலின பாகுபாடின்றி, பெண் அதிகாரிகளுக்கு சம உரிமை வழங்கி வருகிறது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டும் அது போன்ற காட்சிகளை நீக்காமல் படத்துக்கு முன்னால் மறுப்பு ஒன்றை மட்டுமே சேர்த்துள்ளனர் என்று விமானப்படையின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    IAF objects to its ‘undue negative portrayal’ in Gunjan Saxena
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X