»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகளாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்கள், முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை நேரில் சந்தித்துவாழ்த்து பெற்றனர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் தேர்வு சமீபத்தில்நடைபெற்றது.

இத் தேர்தலில் சங்கத் தலைவராக இப்ராஹிம் ராவுத்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரது அணி சார்பில் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டவர்களும் வெற்றிபெற்றனர்.

இப்ராஹிம் ராவுத்தருக்கு எதிர் அணியில் போட்டியிட்ட கேயாரும் அவரதுஅணியினரும் தோல்வியடைந்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்து பெறதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

அதன்படி இப்ராஹிம் ராவுத்தர், துணைத் தலைவர்கள் ஏ.எல்.அழகப்பன்,கோவைத்தம்பி, செயலாளர்கள் சித்ரா லட்சுமணன், அன்பாலயா பிரபாகரன்,பொருளாளர் முரளீதரன், செயற்குழு உறுப்பினர்கள் காஜா மொய்தீன், ஆனந்திநடராஜன், மோகன் நடராஜன், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், எஸ்.எஸ்.சக்ரவர்த்தி,புஷ்பா கந்தசாமி, எச்.முரளி, எஸ்.ஏ. சந்திரசேகர், சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர்ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil