»   »  ஏய்யா ஜடேஜா, நீ அவுட்டாயிருந்தா என்ன கொறஞ்சா போயிருப்ப: குமுறும் பிரபலங்கள்

ஏய்யா ஜடேஜா, நீ அவுட்டாயிருந்தா என்ன கொறஞ்சா போயிருப்ப: குமுறும் பிரபலங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் இந்தியர்கள் கவலையில் உள்ளனர்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் வெளுத்து வாங்கியபோது ரவீந்திர ஜடேஜாவால் ரன் அவுட் ஆனார்.

இந்நிலையில் இது குறித்து திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

குஷ்பு

பாகிஸ்தான் அணியின் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் லைன் அப் சூப்பர்ப் என்றே கூற வேண்டும். நாளை என்பது இல்லை என்பது போன்று விளையாடுகிறார்கள் என்று குஷ்பு ட்வீட்டியுள்ளார்.

ராகுல்

40 பந்துகளில் 70 ரன்கள் அடித்தவருக்காக உங்கள் விக்கெட்டை தியாகம் செய்திருக்கக் கூடாதா? விளையாடுகிறீர்களா ஜடேஜா!

சாந்தனு

வாழ்த்துக்கள் பாகிஸ்தான், பிகே தான் இன்று சிறந்த டீம். இந்தியா ப்ளீஸ் விரைவில் மீண்டு வாங்க 👍🏻 @ICC #Indvpakfinal என்று நடிகர் சாந்தனு பாக்யராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கேஆர்கே

நேற்றைய போட்டி பிக்சிங் செய்யப்பட்டது என்று கூறி ஏகப்பட்ட ட்வீட் போட்டுள்ளார் பாலிவுட் விமர்சகர் கேஆர்கே. ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் தான் பிக்சிங் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால் அவர் போட்டியில் வெற்றி பெற முயன்றார். ஆனால் பிக்சிங்கில் படிந்த ஜடேஜா அவரை ரன் அவுட் செய்துவிட்டார் என்கிறார் கேஆர்கே.

English summary
Like all Indian cricket fans, film industry celebrities are also heart broken after team India lost to Pakistan in the ICC champions trophy final.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil