»   »  தம்பி தூக்கம் வந்தா போய் தூங்கு- ட்விட்டரில் குறளரசனை "பத்தி விட்ட" பாண்டிராஜ்

தம்பி தூக்கம் வந்தா போய் தூங்கு- ட்விட்டரில் குறளரசனை "பத்தி விட்ட" பாண்டிராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நம்ம ஆளு விவகாரத்தில் படக்குழுவினரின் மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் புதிதாக இந்த மோதலில் இணைந்திருக்கிறார் சிம்புவின் சகோதரர் குறளரசன்.

எனது பாடல்கள் நன்றாக இல்லை என்று கூருகிறார்கள் என்று குறளரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட அமைதியான இயக்குனரான பாண்டிராஜ் கொந்தளித்து குறளரசனை வார்த்தைகளால் வாட்டி வதைத்திருக்கிறார்.


"எனது சகோதரன் தான் எனக்கு எல்லாமே அவனுக்காகத் தான் நான் அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறளரசன் பதிவிட அதற்குப் பதிலடியாக தம்பி தூக்கம் வந்தா போய் தூங்கு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் பாண்டிராஜ்.


இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

சிம்பு - நயன்தாரா நடிப்பில் உருவான இது நம்ம ஆளு திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் வேளையில் புதிதாக ஒரு பிரச்சினையை உருவாகியிருக்கிறார் படத்தின் இசையமைப்பாளரான குறளரசன்.


எனது சகோதரன் தான் எனக்கு எல்லாமே

எனது சகோதரன் தான் எனக்கு எல்லாமே, அவனால் மட்டுமே நான் இன்னும் இந்தப் பணிகளில் (இசை) ஈடுபட்டிருக்கிறேன். இந்த முயற்சியில் பலபேர் என்னை காயப்படுத்திய போதும் எனது சகோதரன் எனக்கு ஊக்கம் அளித்து வருகிறான், அவனைக் கீழிறக்க நான் ஒருபோதும் விடமாட்டேன் என்று கூறியிருந்தார்.


உலகத்திலேயே மோசமான இசை

"விரைவில் எனது தந்தையுடன் ஊடகங்களைச் சந்தித்து முறையான விளக்கம் அளிப்பேன் என்னை நிறைய முறை இயக்குநர் பாண்டிராஜ் காயப்படுத்தி இருக்கிறார். மேலும் எனது பாடல்கள் மற்றும் இசையை உலகிலேயே மிகவும் மோசமானது என்றும் குறிப்பிட்டார். எனது வாழ்க்கையில் இது போன்று என்னை யாரும் காயப்படுத்தியது இல்லை"என்று கூறினார்.


தூக்கம் வந்தா போய் தூங்கு

முதல் ட்வீட்டிற்கு எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்த பாண்டிராஜ் தொடர்ந்து குறளரசன் செய்த ட்வீட்டைப் பார்த்து பொங்கி எழுந்து விட்டார்.
குறளரசனின் ட்வீட்டிற்குப் பதிலாக தம்பி நீ யாருன்னு எனக்குத் தெரியும், நான் யாருன்னு உனக்குத் தெரியும். நாம ரெண்டு பேரும் யாருன்னு இந்த ஊருக்கே தெரியும். தூக்கம் வந்தா போய் தூங்கு என்று பதிலடி கொடுத்தார்.
ரசிகர்கள் முடிவு செய்யட்டும்

எனது இசை நன்றாக இருந்ததா இல்லையா என்பதை ரசிகர்கள் முடிவு செய்யட்டும் என்று குறளரசன் ட்வீட் செய்தார்.


ஒரு நல்ல முதலாளிக்கு அழகு

ஒரு நல்ல முதலாளிக்கு அழகு உழைத்தவனின் வியர்வை காய்வதற்குள் ஊதியம் கொடுப்பது ஒரு வருடம் சென்றாவது கொடுக்கலாமே என்று இயக்குநர் பாண்டிராஜ் கேட்டிருக்கிறார்.


விரைவில் ஊடகங்களைச் சந்திப்பேன்

இது நம்ம ஆளு படக்குழுவினரோடு விரைவில் ஊடகங்களைச் சந்திப்பேன், மேலும் இந்த 2 ஆண்டுகளில் என்ன நடந்தது நான் இந்தப் படத்திற்காக எவ்வளவு போராடினேன் என்பதையும் உங்களுக்கு தெரிவிப்பேன் என்று பாண்டிராஜ் கூறியிருக்கிறார்.


அனைவருக்கும் நன்றி

எனது சகோதரன், தந்தை இந்த ஆல்பம் வெளிவருவதற்கு உதவி செய்த தமன், யுவன் சார் மற்றும் அனிருத் ஆகியோருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறளரசன் கூறியிருக்கிறார்.


என்னமா இப்படிப் பண்றீங்களேம்மா..English summary
Idhu Namma Aalu Issue: Director Pandiraj and Music Composer Kuralaarasan's Ugly Spot on Twitter, Grabbed a Lot of Eyeballs Yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil