»   »  "கெஸ்ட்" ரோலுக்காக ஹன்சிகாவை இழுக்கும்.. "இது நம்ம ஆளு"!

"கெஸ்ட்" ரோலுக்காக ஹன்சிகாவை இழுக்கும்.. "இது நம்ம ஆளு"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க படக்குழுவினர் ஹன்சிகாவை அணுகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள இப்படம் அடுத்தமாதம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.


மீதமுள்ள பாடல்கள்...

மீதமுள்ள பாடல்கள்...

இப்படத்தின் இரண்டு பாடல்களை நடித்துக் கொடுக்க நயன்தாரா மறுத்ததாக செய்திகள் வெளியாயின. ஆனால், நயன் கொடுத்த தேதிகளை படக்குழு வீணடித்து விட்டதாக பாண்டிராஜ் தெரிவித்தார்.


மாமன் வெயிட்டிங்...

மாமன் வெயிட்டிங்...

இந்நிலையில், மாமன் வெயிட்டிங் என்ற பாடல் விரைவில் படமாக்கப்பட உள்ளது. இப்பாடலில் சிம்புவும், ஆண்ட்ரியாவும் நடனமாட இருக்கின்றனர்.


டிரைலர்...

டிரைலர்...

இம்மாதம் 3ம் தேதி சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு 'இது நம்ம ஆளு' படத்தின் இசை வெளியிடப்பட்டது. அதேபோல் டிரைலருக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.


பின்னணி இசை...

பின்னணி இசை...

இப்படத்தின் முதல் பாதியின் பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து விட்டனர். இரண்டாம் பாதிக்கான பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


ஹன்சிகா...

ஹன்சிகா...

இந்த சூழ்நிலையில், இப்படத்தில் கௌரவ வேடம் ஒன்றில் நடிப்பதற்காக ஹன்சிகாவை படக்குழு அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 4 நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.


சம்மதம்?

சம்மதம்?

ஆனால், இதற்கு ஹன்சிகா தரப்பில் இருந்து அனுமதி கிடைத்ததா என்பது குறித்து தெரியவில்லை. அப்படி அவர் சம்மதம் தெரிவித்தால், மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


காதல் பறவைகள்...

காதல் பறவைகள்...

ஏற்கனவே காதலில் பிரிந்த சிம்பு, நயன் இப்படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்வதால் இது நம்ம ஆளுக்கு எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இந்த சூழ்நிலையில் வாலு, வேட்டை மன்னன் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்தபோது காதலித்து, பின் பிரிந்த ஜோடி தான் சிம்புவும், ஹன்சிகாவும்.


இது நம்ம ஆளு...

இது நம்ம ஆளு...

மீண்டும் பழைய காதலி நயனுடன் படத்தில் நடித்ததால் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்தே சிம்புவை ஹன்சிகா பிரிந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அதே படத்தில் சிம்புவுடன் ஹன்சிகாவும் சேர்ந்து நடித்தால் சொல்லவும் வேண்டுமா...


English summary
If reports are to be believed, the team of Idhu Namma Aalu has approached Hansika for a cameo in the film. We hear that they just need four days to wrap up her portions. .

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil