»   »  ”இட்லி” – டெக்னாலஜி தெரியாத 3 பாட்டிகளும், ஒரே ஒரு பேத்தியும்!

”இட்லி” – டெக்னாலஜி தெரியாத 3 பாட்டிகளும், ஒரே ஒரு பேத்தியும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகளுக்கான கதைகளுக்குப் பெயர் போனவர்கள் பாட்டிகள். பாட்டிகளிடம் கதை கேட்டு வளர்ந்த பரம்பரை நம்முடையது.

அப்படிப்பட்ட அபாரமான கதை சொல்லி பாட்டிகளைப் பற்றிய கதைதான் "இட்லி" என்னும் பெயரில் கோலிவுட்டில் படமாக உருவாகி வருகிறது.

இட்லி என்றதும் சாப்பிடும் இட்லி என்று நினைத்து விட வேண்டாம்... இட்லி என்பது "இன்பா ட்விங்கிள் லில்லி" ஆகியவற்றின் சுருக்கமாம்.

அப்பு மூவிஸ் தயாரிப்பில்:

அப்பு மூவிஸ் தயாரிப்பில்:

இப்படத்தை "கதம்கதம்" படத்தைத் தயாரித்த அப்பு மூவீஸ் தயாரிக்கிறது. வித்யாதரன் இயக்கி வருகிறார்.

சரத்குமார் டூ உபேந்திரா:

சரத்குமார் டூ உபேந்திரா:

இவர் ஏற்கனவே சரத்குமார் நடித்த வைத்தீஸ்வரன், கன்னடத்தில் உபேந்திரா நடித்த நியூஸ் படங்களை இயக்கியவர். தரண் இசையமைக்கும் இப்படத்திற்கு கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

டெக்னாலஜி பாட்டீஸ்:

டெக்னாலஜி பாட்டீஸ்:

டெக்னாலஜி தெரியாத 3 பாட்டிகள் இருக்கிறார்கள். அவர்களின் பேத்திக்கு ஒரு பிரச்சினை வருகிறது. அதிலிருந்து மீட்பதற்கு விபரீதமான முடிவை எடுக்கிறார்கள்.

இதுதான் கதையாம்பா:

இதுதான் கதையாம்பா:

இந்தக்கால டெக்னாலஜியை அவர்கள் பாணியில் பயன்படுத்தி எப்படிக் காப்பாற்றுகிறார்கள் முடிவு என்ன என்பதே படத்தின் கதையாம்.

மூன்று பாட்டிகள்:

மூன்று பாட்டிகள்:

அந்த 3 பாட்டிகளில் இன்பாவாக சரண்யாவும், ட்விங்கிளாக கோவை சரளாவும், லில்லியாக கல்பனாவும் நடிக்கிறார்கள்.

ஒரே ஸ்டார்ஸ் கூட்டம்:

ஒரே ஸ்டார்ஸ் கூட்டம்:

பேத்தியாக சலீம் படத்தில் நடித்த அஸ்கிதா நடிக்கிறார். மேலும் "கத்தி" அனுகிருஷ்ணா, மனோபாலா, சுவாமிநாதன், இமான் அண்ணாச்சி, லொள்ளுசபா மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். மாபியா கேங் லீடராக "நான் கடவுள்" ராஜேந்திரன் நடிக்கிறார்.

விரையில் வெள்ளித்திரையில்:

விரையில் வெள்ளித்திரையில்:

காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு 6 ஆம் தேதி தொடங்கி ஒரே கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

English summary
Idly is a new movie in kollywood which on shot with three grandma’s and a grand daughter’s story
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil