twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கவர்ச்சியாக நடித்திருந்தால் இவ்வளவு நாள் சினிமாவில் இருந்திருக்க முடியாது..சேரன் பட நடிகை ஓபன் டாக்!

    |

    சென்னை: நடிகர் சசிகுமார், ஹரிப்ரியா, விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் சத்யா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "நான் மிருகமாய் மாற". த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சஞ்சய்குமார் தயாரித்துள்ளார்.

    கர்நாடகாவில் பல வெற்றி படங்களில் நடித்த ஹரிப்பிரியா, நடிகர் சேரனுடன் முரண் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் 47 படங்களை நடித்து முடித்த ஹரிப்பிரியா நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    விஜயகாந்த் மகனை வைத்து படம் இயக்க போகிறேன்.. மீண்டும் டைரக்டராகும் சசிகுமார்! விஜயகாந்த் மகனை வைத்து படம் இயக்க போகிறேன்.. மீண்டும் டைரக்டராகும் சசிகுமார்!

    இரண்டு விதமான எமோஷன்

    இரண்டு விதமான எமோஷன்

    கேள்வி: நான் மிருகமாய் மாற படத்தில் யாரை மிரட்டியுள்ளீர்கள்?

    பதில்: நான் மிருகமாய் மாற படத்தில் நடிகர் சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ளேன். கதாபாத்திரத்தின் பெயர் ஆனந்தி. பெயருக்கேற்றாற்போல் ஆனந்தமாக வாழ்க்கை வாழ்வது தான் எனக்கு படத்தில் கொடுக்கப்பட்ட வேலை. நடிகர் சசிகுமார் வெளியே சென்று விட்டு, டென்ஷனாக வரும்பொழுது அவரை சமாதானப்படுத்தும் மனைவி கதாபாத்திரம். இப்படத்தில் இரண்டு விதமான எமோஷனை வெளிப்படுத்தியுள்ளேன். படத்தில் எனக்கு சண்டைக்காட்சிகள் கிடையாது. ஆனால் நடிப்பில் சண்டை போட்டுள்ளேன் என்றார்.

    இயக்குநர்களுக்கு நன்றி

    இயக்குநர்களுக்கு நன்றி

    கேள்வி: இயக்குநர் பிரசாந்த் நீல், நடிகர் ரிஷப் ரெட்டி, நடிகர் யாஷ் உடன் நடித்த அனுபவம் குறித்து...

    பதில்: நான் ஏற்கனவே இயக்குநர் பிரசாந்த் நீல் படத்தில் பணியாற்றியுள்ளேன். தற்போது வெற்றிப்படமாக வந்துள்ள காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ரெட்டியுடன், ஏற்கனவே பெல் பாட்டம் படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளேன். மேலும் நடிகர் யாஷ் உடன் ஒரு படத்தில் பணியாற்றியுள்ளேன். சிறந்த இயக்குநர்கள், சிறந்த நடிகர்கள் மற்றும் சிறந்த தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தது என்பது எனக்கு பெருமையாக உள்ளது. வித்தியாசமான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர்களுக்கும், நான் கற்பனையில் கூட செய்ய முடியாத கதாபாத்திரத்தை, என்னால் முடியும் என்று என்னை நம்பி எனக்கு அளித்த இயக்குநர்களுக்கும் நன்றி. பெண் போலீஸ், கல்லூரி செல்லும் பெண் போன்ற கதாபாத்திரங்களும் செய்துள்ளேன். மேலும் Historical Film, Periodical Film போன்றவற்றையும் செய்துள்ளேன். வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்வதற்காக எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. பாட்டு மற்றும் கிளாமர் கதாபாத்திரம் மட்டும் செய்திருந்தால், இத்தனை வருடங்களாக சினிமாத்துறையில் என்னால் இருந்திருக்க முடியாது. நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்ததால் மட்டுமே இத்தனை வருடம் என்னால் சினிமாத்துறையில் இருக்க முடிகிறது என்றார்.

    இரண்டு நண்பர்கள்

    இரண்டு நண்பர்கள்

    கேள்வி: நான் மிருகமாய் மாற படத்தில் நீங்கள் டப்பிங் பேசியுள்ளீர்களா?

    பதில்: தமிழில் பேசுவதற்கு ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். சமீப காலமாக தமிழ் படங்களில் நான் நடிக்கவில்லை. அதனால் தான் தமிழில் பேசுவதற்கு சிரமப்படுகிறேன். எனக்கு தமிழில் பேசுவதற்கு இரண்டு நண்பர்கள் உள்ளனர். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும்பொழுது, படக்குழுவினர் தமிழில் பேசும்பொழுது, என்னாலும் தமிழ் நன்றாக பேச முடிகிறது. நான் மிருகமாய் மாற படத்தில் நான் டப்பிங் பேசவில்லை. ஆனால் டப்பிங் பேசுகிறேன் என்று கேட்டேன். இயக்குநர் நீங்கள் இன்னும் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். இனி வரும் படங்களில் கண்டிப்பாக தமிழில் டப்பிங் பேசுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

    ரசிகர்கள் கமெண்ட்

    ரசிகர்கள் கமெண்ட்

    கேள்வி: சோஷியல் மீடியாவில் போடுவதற்காக நீங்கள் தனியாக போட்டோ ஷூட் எதுவும் நடத்துகிறீர்களா?

    பதில்: மற்றவர்களைபோல் நான் தனியாத போட்டோ ஷூட் நடத்துவதில்லை. என்னுடைய நிஜ வாழ்க்கையில் எடுக்கின்ற போட்டோக்களையும், படப்பிடிப்பின்போது எடுக்கக்கூடிய போட்டோக்களை மட்டுமே சோஷியல் மீடியாவில் பதிவிடுகிறேன். அதே போல் ரசிகர்கள் பதிவிடும் கமெண்ட் படித்து விடுவேன். பெரும்பாலான பதிவுகளுக்கு பதிலும் அனுப்பி விடுவேன். ஏனென்றால் அவர்களின் ஆதரவால் தான் இன்னும் நான் சினிமாத்துறையில் இருக்கிறேன் என்றார்.

    கேள்வி: உங்களை யாருடன் ஒப்பிடுவார்கள்?

    பதில்: என்னை நடிகை ரோஜாவுடன் ஒப்பிடுவார்கள். மேலும் நடிகை ஸ்ரீதேவி, அனுஷ்காஷெட்டி ஆகியோர் போல் இருப்பதாகவும் கூறுவார்கள் என்றார்.

    நல்ல கதையம்சம்

    நல்ல கதையம்சம்

    கேள்வி: தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பீர்களா?

    பதில்: நான் நடிகர் சேரனுடன் நடித்த முரண் படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடிகர் சேரனை நான் சந்திக்கவில்லை. சினிமாத்துறையில் நிகழ்ச்சிகள் நடக்கும்பொழுது சந்திப்போம். தமிழில் நல்ல கதையம்சம் கொண்ட நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அதற்கான கதையும் கேட்டுக் கொண்டு வருகிறேன். நல்ல கதை வரும் பட்சத்தில் கண்டிப்பாக தமிழில் நடிப்பேன் என்றார்.

    வித்தியாசமான கதாபாத்திரம்

    வித்தியாசமான கதாபாத்திரம்

    கேள்வி: நீங்கள் நடிக்கும் 50வது படம் எந்த இயக்குநர், எந்த நடிகர் என்று முடிவு செய்து வீட்டீர்களா?

    பதில்: 50வது படத்தில் நடிப்பது குறித்து எந்தவொரு ப்ளானும் இல்லை. நமது அன்றாட வாழ்க்கையை ப்ளான் செய்து வாழ முடியும். ஆனால் சினிமாத்துறையை பொறுத்தவரை அவ்வாறெல்லாம் ப்ளான் செய்ய முடியாது. வித்தியாசமான கதாபாத்திரம் செய்ய வேண்டும். நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/worf9x-snEw இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    Actor Sasikumar, Haripriya and Vikrant starrer "Naan Mirugamai Mara" directed by Sathya Siva. Gibran has composed the music for this thriller film and this movie Produced by Sanjay Kumar. Haripriya, who has acted in many successful films in Karnataka, had acted in the film Muran with actor Cheran. It is also noteworthy that the film received a good reception among the fans. In this case, Haripriya, who has completed 47 films, gave a special interview to our filmbeat channel here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X