’நான் வந்தா வேற மாதிரி’..பிக்பாஸுக்குள் நுழைகிறாரா மன்சூர் அலிகான்?
பிக்பாஸ் வீட்டில் நான் வந்தா வேற மாதிரி இருக்கும், நான் தான் பிக்பாஸ் என மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் லிஸ்ட்டில் மன்சூர் அலிகானின் பெயரும் இருந்தது. ஆனால் அவர் வரவில்லை.
தற்போதுள்ள சூழ்நிலையில் மேலும் சுவாரஸ்யம் சேர்க்க மன்சூர் அலி வருகிறாரா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.

கடாமுடா மன்சூர் அலிகான்
தமிழ் திரைப்பட நடிகர்களில் வித்தியாசமானவர் மன்சூர் அலிகான். தைரியசாலியும்கூட. யாரைப்பற்றியும் கவலைப்படாமல் கருத்து கூறுபவர். சுருக்கமாக சொன்னால் அவரை ஒரு கூட்டுக்குள் அடைத்துவிட முடியாது. தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு வித்தியாசமாக அவர் செய்த பிரச்சாரம் பெருமளவு மக்களை சென்று சேர்ந்தது. இவரை வைத்து எப்படி இயக்குநர்கள் படம் இயக்கினார்கள் என்று யோசிக்கும் அளவுக்கு கடாமுடா பார்ட்டி.

சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கும் மன்சூர் அலிகான்
சமீப காலமாக மீண்டும் மன்சூர் அலிகான் படங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளார். அவ்வப்போது டான்ஸ் ஆடும் வீடியோக்களை போட்டு கலக்கி வருகிறார். இடையிடையே உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டும், இயற்கை உணவு சாப்பிடும் காணொளிகளை வெளியிட்டும் சமூக வலைதளங்களில் பரபரப்பாகவே காணப்படுகிறார் மன்சூர் அலிகான்.

பிக்பாஸ் ராஜூவை கலாய்த்த மன்சூர் அலிகான்
சமீபத்தில் ராஜு வூட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மன்சூர் அலிகான் பிரியங்காவுடன் சேர்ந்துக்கொண்டு கலாய்த்தார். அமிதாப் பச்சன் மாதிரி ஆறடி உயரத்தில் அம்சமாக இருக்கிறாய். பிக்பாஸ் போய்விட்டு வந்தேல்ல, கப்பு வாங்கின அப்படியே சினிமா பக்கம் போகாமல் இங்க என்ன பண்ணிகிட்டிருக்க, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே திரிய போகிறாய் என ராஜுவை செம்ம கலாய் கலாய்த்தார். 106 நாள் ஜெயில்ல இருக்கிற மாதிரி பிக்பாஸ் வீட்டில் இருந்தாய் அல்லவா? அப்புறம் எதுக்கு இன்னும் இந்த சானல்லேயே கிடக்கிறாய் வெக்கமாக இல்ல என கலாய்த்தார். சான்ஸ் வந்தால் போக மாட்டேனா சார் என ராஜு மனதுக்குள் நினைத்துக்கொண்டு மேலுக்கு சிரித்து வைத்தார்.

நட்சத்திர போட்டியாளர் ஜி.பி.முத்து இடத்தில் மன்சூர் அலிகான்?
பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருப்பதை கலாய்த்த மன்சூர் அலிகான் பிக்பாஸ் சீசன் போட்டியாளராக வரப்போகிறார் என தகவல் வெளியானது. ஆனால் அவர் கலந்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திடீரென பிக்பாஸின் நட்சத்திர போட்டியாளர் ஜி.பி.முத்து வீட்டிலிருக்க பிடிக்காமல் வெளியேறியது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்துக்கு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் யாராவது வருவார்கள் எனக்கூறப்பட்ட நிலையில் மன்சூர் அலிகான் வர உள்ளதாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

நான் வந்தால் நான் தான் பிக்பாஸ் - மன்சூர் அலிகான்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதாக தகவல் பரவுவது பற்றி மன்சூர் அலிகானிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான் அதிரடியாக பதிலளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், 'நான் தான் பிக்பாஸாக இருப்பேன்' என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் கூத்துகள் தயங்கும் மன்சூர் அலிகான்
மேலும் பேசிய மன்சூர் அலிகான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பதாக இருந்தால், 'விவசாயத்திற்கு முக்கியத்துவம்' கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை அங்கு இருந்து நடத்துவேன்" என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். யாருக்கும் அடங்காத மன்சூர் அலிகானை பிக்பாஸ் ஒருவழி செய்துவிடும் என்பதால பிக்பாஸ் வீட்டுக்கு மன்சூர் அலிகான் செல்ல தயங்குகிறார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











