பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்குகிறாரா அஜித்.. திடீரென இப்படியொரு அறிக்கை வெளியிட என்ன காரணம்?
சென்னை: துணிவு மற்றும் வாரிசு என இரு படங்களும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அதுதொடர்பாக சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வெடித்து வருகின்றன.
உதயநிதி ஸ்டாலின் அஜித்தின் துணிவு படத்தை வெளியிட உள்ள நிலையில், விஜய்யின் வாரிசு படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்காது என்றும் விவாதங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் அறிக்கையை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தற்போது வெளியிட்டு ரசிகர்களை அமைதி காக்க செய்துள்ளார்.

பொங்கல் ரேஸ்
அஜித் மற்றும் விஜய் இடையே நீண்ட வருடங்களாக நேரடி மோதல் தவிர்க்கப்பட்டு வரும் நிலையில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு என இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், துணிவு தள்ளிப் போகும் என்று விஜய் ரசிகர்களும், வாரிசு தள்ளிப் போகும் என்று அஜித் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் சண்டைப் போட்டு வருகின்றனர்.

ப்ரீ ரிலீஸ் பிசினஸ்
வாரிசு படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் 265 கோடி ரூபாய் என்றும் துணிவு படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் 295 கோடி ரூபாயும் டிராக்கர் என்கிற பெயரில் சுற்றிக் கொண்டு இருக்கும் ரசிகர்கள் இஷ்டத்துக்கு தினமும் ஒரு கணக்கை சொல்லி தேவையில்லாமல் அஜித் - விஜய் ரசிகர்கள் மத்தியில் வீண் சண்டையை வளர்த்து வருகின்றனர்.

அஜித் அதிரடி அறிக்கை
வாரிசு மற்றும் துணிவு படத்தின் ரிலீஸை வைத்து சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய சண்டை நடைபெற்று வரும் நிலையில், திடீரென நடிகர் அஜித் தனது மேனேஜர் ஆன சுரேஷ் சந்திராவை வைத்து வழக்கம் போல ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை பரபரப்பாக்கி உள்ளது.

நெகட்டிவிட்டி வேண்டாம்
உங்களை சுற்றி உள்ள ஆட்கள் உங்களை முன்னுக்கு கொண்டு வரும் நபர்களாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தேவையில்லாத டிராமா மற்றும் நெகட்டிவிட்டி வேண்டாம். மேலும், பெரிய இலக்குகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையில் பல சாதனைகளை செய்ய முயலுங்கள். தேவையற்ற நெகட்டிவிட்டி வேண்டாம். வாழு வாழ விடு என நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது தீயாக பரவி வருகிறது.

துணிவு ரிலீஸ் தள்ளிப்போகிறதா
வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு இடையேயான மோதல் காரணமாகவே இப்படியொரு அதிரடி அறிவிப்பை நடிகர் அஜித் வெளியிட்டுள்ளார் என்றும் திடீரென இப்படியொரு அறிவிப்பை சொல்லி இருக்கும் நிலையில், துணிவு மற்றும் வாரிசு இடையே மோதல் ஏற்படாது என்கிறாரா? அல்லது துணிவு படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறதா? என்ன சொல்ல வருகிறார் அஜித் என பலரும் சுரேஷ் சந்திராவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு அட்வைஸ்
வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரே தேதியில் வெளியானால் கூட தேவையற்ற சோஷியல் மீடியா சண்டைகளை தவிர்த்து உங்க பொழப்பை பாருங்க என தனது ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ் செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் அஜித்தின் அறிக்கைக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

ப்ரொமோஷன் குறித்து
முன்னதாக நடிகர் அஜித் துணிவு படத்தின் ப்ரொமோஷனுக்கு தான் வரமாட்டேன் என்பதை உணர்த்தும் வகையில், சிறந்த படம் என்பது தன்னைத் தானே ப்ரொமோட் செய்து கொள்ளும் என பதிவிட்டு இருந்தார். அதற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











