»   »  ஐஐஎப்ஏ விருதுப் போட்டியில் பாகுபலியுடன் டஃப் கொடுக்கும் ஸ்ரீமந்துடு!

ஐஐஎப்ஏ விருதுப் போட்டியில் பாகுபலியுடன் டஃப் கொடுக்கும் ஸ்ரீமந்துடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் ஆந்திர பதிப்புக்கான விருதுப் பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் எதிர்பார்த்தது போல பாகுபலி முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேசமயம், மகேஷ்பாபுவின் ஸ்ரீமந்துடுவும் சரியான போட்டியைக் கொடுத்துள்ளது.

சரித்திரத்தை பிரமாண்டமாக வெள்ளித்திரையில் விவரித்த பாகுபலி படம் மூலம் மொத்த மொத்த சினிமா உலகையும் தன் பக்கம் திருப்பியவர் ராஜமௌலி.

எனினும் பாகுபலிக்கும் சவாலாக ஸ்ரீமந்துடுவும், எவடே சுப்பிரமணியம் படமும் இதற்குக் கடும் போட்டியைக் கொடுத்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இந்த திரைப்பட விழா நடைபெறவுள்ளது. அப்போது விருகள் அறிவிக்கப்படும்.

இரண்டு சவால் படங்கள்:

இரண்டு சவால் படங்கள்:

பாகுபலியை அடுத்து கதைக்காகவும், சமூக அக்கறைக்காகவும் என பரிந்துரைப் பட்டியலில் அதிகம் இடம்பிடித்துள்ள படம் ஸ்ரீமந்துடு. இதற்கிடையில் யாரும் எதிர்பாரா வண்ணம் நானியின் எவடே சுப்ரமணியம் படமும் இந்த விருது வரிசையில் இடம்பிடித்துள்ளது.

ஸ்ரீமந்துடு ஏன்?:

ஸ்ரீமந்துடு ஏன்?:

மகேஷ் பாபு, ஜெகபதிபாபு, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ஸ்ரீமந்துடு, கிராம முன்னேற்றம் குறித்த செய்தியை எடுத்துக் காட்டியதற்காகவே விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாம யாருப்பா:

நாம யாருப்பா:

எவடே சுப்ரமணியத்தில் சுப்புவாக நானி. ஆனந்தியாக வரும் மாளவிகா நாயர். நான் யார் என்கின்ற கேள்விக்கு பதிலாக அமைந்த இந்த திரைப்படமும் தெலுங்கில் சக்கைப் போடு போட்டது.

11 பிரிவுகளில் இடம்:

11 பிரிவுகளில் இடம்:

பட்டியலில் அதிகமாக 11 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது பாகுபலி. சிறந்த படமாக பாகுபலி, சிறந்த இயக்குநராக ராஜமௌலி, சிறந்த நடிகராக பிரபாஸ், சிறந்த நடிகையாக தமன்னா, சிறந்த குணச்சித்திர நடிகராக சத்யராஜ், நடிகையாக ரம்யா கிருஷ்ணன் என 11 பிரிவுகளில் பாகுபலி இடம்பிடித்துள்ளது.

அதுக்கு 8, இதுக்கு 5:

அதுக்கு 8, இதுக்கு 5:

அதே போல் மகேஷ் பாபு நடிப்பில் ஸ்ரீமந்துடு படமும் 8க்கும் மேற்பட்ட பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. நானியின் எவடே சுப்ரமணியம் படமும் 5 பிரிவுகளில் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
IIFA Awards are now coming to South.IIFA Utsavam 2015 will be held on 5th and 6th December at Gachibowli Stadium, Hyderabad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil